சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 1 கப்
பொடித்த ஓட்ஸ் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கேரட் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லி – 1 கைப்பிடி
கறிவேப்பிலை தளிராக – 5 இணுக்கு
பொடியாக அரிந்த பீன்ஸ் 2., குடைமிளகாய் 1/4 பாகம்., முட்டைக்கோஸ் சிறிது – விரும்பினால்.
உப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 20 மிலி

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நறுக்கிய காய்கறிகளை ஒன்றாக கலந்து வைக்கவும்.

* தோசை மாவுடன் ஓட்ஸ் பொடியை சிறிது நீரும், உப்பும் சேர்த்துக் கலக்கவும்.

* தோசைக்கல்லை காயவைத்து ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் ஊற்றவும்..

* பின்னர் காய்கறிகளை ஒரு கைப்பிடி எடுத்து ஊத்தப்பத்தின் மேல் தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

* ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பிவிடவும்.

* பொன்னிறமானதும் எடுத்து சுட சுட கொத்துமல்லி., கறிவேப்பிலை சட்னியுடன் பரிமாறவும்.

* நல்ல கலராக., வாசனையுடன் கூடிய தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கும்., லன்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பவும்.201607230808229726 Tasty nutritious oats vegetable uttapam SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button