ஆரோக்கியம் குறிப்புகள்

கொழுப்பு அளவு… ஆண்களும் பெண்களும்

கொழுப்பு என்பது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

கொழுப்பு அளவு… ஆண்களும் பெண்களும்
கொழுப்பு என்ற சொல்லே இன்று பலருக்கு அச்சம் தருகிறது. அந்த அச்சத்துக்கு ஏற்ப, கொழுப்பு என்பது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

பெண்களின் உடலில் பின்புறத்திலும், தொடைகளிலும், தோலுக்குச் சற்றுக் கீழும் மட்டுமே கொழுப்பு திரளும்.

ஆனால் ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு திரளும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட அளவு வரை உடம்பில் கொழுப்பு சேரலாம் என்றபோதும், பொதுவாக உச்சவரம்புகளைவிடக் குறைவாக இருப்பதே நல்லது.

பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும், பின்புறத்திலும், தொடைகளிலும் கொழுப்பு குறையாது.

ஏனெனில் அந்த இடங்களில் உள்ள கொழுப்புச் செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காக அவை தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவுகின்றன.

ஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறையும் நிலை ஏற்பட்டால், பின்புறத்திலும், தொடைகளிலும் உள்ள செல்களில் இருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கின்றன.

எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.

ஆனால், ஆண்கள் கொழுப்பு குறித்து அதிகக் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் தங்களைத் தாக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு கொழுப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.201607230712039171 Cholesterol levels men and women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button