அசைவ வகைகள்

சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான தயிர் சிக்கன் வறுவல்

சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
மிளகுதூள் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
தயிர் – 4 தேக்கரண்டி
பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
உப்பு – அரை தேக்கரண்டி

செய்முறை :

* சிக்கனை சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், மிளகுதூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக பிரட்டவும்.

* பின் அவற்றுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும். (பிரிட்ஜிலும் வைக்கலாம்)

* பிரட் தூளை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும்.

* கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்

* ஊறின சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து பிரட் தூளில் போட்டு எல்லா பக்கமும் பிரட் தூள் படுமாறு பிரட்டி எடுக்கவும்.

* எண்ணெய் சூடானவுடன் பிரட்டி எடுத்த கோழிகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து எல்லா பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான தயிர் சிக்கன் வறுவல் தயார்.201607221408502736 Crispy Yogurt Chicken bread crumbs fry SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button