கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி கொட்டுவது இயல்பானதா?

ld752முகத் தோற்றத்துக்கு அழகு சேர்ப்பது முடி. முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது.

குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இதனால் அவர்கள் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.

இந் நிலையில் முடியின் இயல்பான வளர்ச்சி, முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவது ஏன், முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை உண்டா என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் தகுந்த நிவாரணத்தைப் பெற முடியும்.

முடி கொட்டுவது இயல்பானதா?

தலை முடியின் வளர்ச்சிக் காலம் 2 முதல் 6 ஆண்டுகள். ஒவ்வொரு முடியும் 1 செ.மீ. அளவுக்கே வளரும். மண்டை ஓட்டில் முடி முளைத்து, 2 அல்லது 3 மாதங்களில் தானாக உதிர்வது இயல்பானது. முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி முளைக்கும்.

ஆனால், சில காரணங்களால் நாள் ஒன்றுக்கு 20 முடி கொட்டினால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் நிலையில் முடி கொட்டுவதைத் தடுக்க முடியும்.

முடி கொட்டக் காரணம் என்ன?

பரம்பரைத் தன்மை, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமலிருப்பது, சுகாதாரமற்ற முறையில் தலை முடியை வைத்திருப்பது, தைராய்டு நோய், குழந்தை பிறப்பு, நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகள், நோய்த் தொற்று, புற்று நோய், ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி கொட்டலாம்.

முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை என்ன?

காரணத்தைக் கண்டுபிடித்து விடும் நிலையில் சிகிச்சை அளிப்பது எளிதானது. மருந்துகள் காரணமாக முடி கொட்டினால், மாற்று மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். நோய்த் தொற்றைப் போக்க சிகிச்சை அளிக்கும் நிலையில், முடி கொட்டுவது நின்று விடும். ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையைச் சரி செய்யும் நிலையிலும் முடி கொட்டுவது நின்று விடும்.

முடி கொட்டுவதைத் தடுக்கவும், வழுக்கையை தாமதப்படுத்தவும் ஒளிக் கதிர் சிகிச்சை முறை உள்ளது. இந்த ஒளிக் கதிர் சிகிச்சையை 20 முதல் 30 நிமிஷம் அளிக்க வேண்டும். முடி கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர நிவாரணம் பெற மொத்தம் எட்டு முதல் 20 தடவை சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button