ஆரோக்கிய உணவு

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்!!!

தற்போது உலகில் இரத்த அழுத்தமும், நீரிழிவும் தான் பலரது வாழ்க்கையை பாழாக்கி வருகிறது. இவை அனைத்திற்கும் அலுவலக டென்சன் ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், உணவுப் பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாக அமைகின்றன. இப்பிரச்சனை ஒருவருக்கு வந்துவிட்டால், அவர் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு தான், கண்ட உணவுப் பொருட்களின் மீது அதிக அளவில் ஆசை எழும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அதற்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், அதனை குறைப்பதற்கும், கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கும் ஒருசில உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், நிச்சயம் அவற்றை கட்டுப்படுத்தலாம். சரி, இப்போது உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகளைப் பார்ப்போமா!!!

பசலைக் கீரை

பசலைக் கீரையில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இவை உடலில் இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்க உதவும். எனவே அன்றாட உணவில் முடிந்தால், பசலைக் கீரையை உட்கொண்டு வாருங்கள்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் என்றதும் சிரிக்க வேண்டாம். இதனை அளவாக உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதுவே ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் ஆய்வு ஒன்றில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பு நீக்கிய பால்

கொழுப்பு நீக்கிய பாலில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

தக்காளி

தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளதால், இவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இவற்றை உட்கொண்டு வருவதும் நல்லது.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆந்தோசையனின்கள் உள்ளதால், ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றை உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ஓட்ஸ்

காலையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஓட்ஸை ஒரு பௌல் சாப்பிட்டு வந்தால், அவை உயர் இரத்தத்தைக் குறைப்பதாக ஹாவார்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிலும் ஓட்ஸ் உடன் பெர்ரிப் பழங்களை சேர்த்து உட்கொண்டு வருவது இன்னும் நல்லது என்றும் கூறுகின்றனர்.

பீட்ரூட் ஜூஸ்

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் குறைவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் இதற்கு அதில் உள்ள நைட்ரேட் தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.
27 1435394636 6 berries

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button