மருத்துவ குறிப்பு

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!!!

கறை!! நல்லதென விளம்பரம் செய்தாலும், ஆண்களை கடுப்பேற்றும் விஷயமாகும். கணவன் மாணவிகளுக்கு மத்தியில் பெரும்பாலுமான சண்டைகளை தொடங்குவதற்கு இதுதான் மூலக் கருவாக இருக்கும்.

அதிலும் ஆசை மனைவி கணவனுக்கு பிடித்தமான சட்டையில் தான் போக்க முடியாத கறை அண்டும்படி செய்வார். அனைத்திற்குமே தீர்வு இருக்கும் இந்த உலகில், இந்த கறைகளை போக்குவதற்கு ஓர் தீர்வு இருக்காதா என்ன?

இருக்கிறது, அனைத்துக் கறைகளை போக்குவதற்கும் தீர்வு இருக்கிறது. கிரீஸ் கறையில் இருந்து இன்க், இரத்தம் என எந்த கறையாக இருந்தாலும் எளிதாக போக்கலாம்….

உடனடியாகக் கறையினை போக்க…

நீங்கள் எங்காவது விருந்திற்கு சென்ற இடத்தில் ரெட் ஒயின் அல்லது தக்காளி சாஸ் கொட்டி துணியில் கறைப்படிந்துவிட்டால் பயப்படவே வேண்டாம். வீட்டிற்கு சென்றதும், துணியை கொஞ்சம் ஈரம் செய்து, அந்த கறையின் மீது கிளப் சோடாவை சேர்த்து துவைத்தால் அந்த கறை மிக எளிதில் போய்விடுமாம். வாஷிங் மெஷினில் துவைத்தால் இன்னும் நல்லது.

புல் கறை

எங்காவது விளையாடும் போது அல்லது தவறியோ புல் தரையில் விழுந்து அந்த கறை சட்டையோடு ஒட்டிக்கொண்டால், உங்கள் பழைய டூத் பிரஷில் டூத் பேஸ்ட்டை (ஜெல் வகையிலான டூத் பேஸ்ட்டை தவிர்க்கவும்) பயன்படுத்தி, துணியை தண்ணீரில் முக்கி எடுத்து நன்கு தேய்த்து துவைதாலே புல் கறை போய்விடும்.

இரத்தக் கறை

எதிர்பாராத விபத்தாக இரத்தக் கறை உங்கள் சட்டையில் ஒட்டிக்கொண்டால், முதலுதவிப் பெட்டியில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு எடுத்துக் கொள்ளவும், முதலில் நீரில் பெராக்சைடை கலந்துவிடவும். பிறகு நன்கு அலாசிய பின்பு, ஹைட்ரஜன் பெராக்சைடு கொஞ்சம் அதிகமாக கலந்து துவைக்கவும். இப்படி செய்தால் இரத்தக்கறையை எளிதாக போக்கலாம். மற்றும் பழைய உப்பை இரத்தக்கறை ஏற்பட்ட இடத்தில் உபயோகித்து துவைத்தாலும் அந்த கறையை அகற்ற முடியும்.

காலர் கறை

ஆண்களின் சட்டையில் காலர் அழுக்கை அகற்றுவது பெண்களுக்கு பெரிய தொல்லையாக அமையும். ஷாம்பூவை நீரில் கலந்து துவைத்தல் எளிதாக அந்த கறையை அகற்றிவிடலாம். (இவ்வளோ ஹார்டான ஷாம்பூவ தலையில தேச்சு குளிக்கிறோமே, நம்ம தலைக்கு எந்த கேடும் வராதா என்ன? யோசிங்க பாஸ்!!!)

லிப்ஸ்டிக் கறை

ரொமான்சின் போது தவறுதலாக லிப்பு தவறி சட்டையில் பதிந்து கறை எற்பட்டுவிட்டால் (ஒருவேளை, பெரும்பாலும் குழந்தைகள் தான் அதை எடுத்து சட்டையில் கிறுக்கி கறையை ஏற்படுத்தும்) ரொட்டி துண்டுகளில் சைடு பகுதியை லிப்ஸ்டிக் கறைப் படிந்த இடத்தில் பயன்படுத்தி பிறகு மென்மையாக தேய்த்து துவைத்தல் லிப்ஸ்டிக் கறை போய்விடுமாம்.

கிரீஸ் கறை

மிகவும் கடினமான மற்றும் அகற்ற முடியாத கறையாக கருதப்படுவது இந்த கிரீஸ் கறை. கவலையே வேண்டாம், கிரீஸ் கறைப் படிந்த இடத்தில் சோளமாவு சேர்த்து சிறுது நேரம் ஊற வைக்கவும். பிறகு, சாதாரணமாக துவைத்தாலே கிரீஸ் கறை போய்விடும்.

எண்ணெய் கறை

சாதாரணமாக தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை பயன்படுத்தி துவைத்தாலே எண்ணெய் கறைகளை அகற்றிவிடலாம்.

இன்க் கறைகள்

மாணவர்களுக்கு பிடித்தக் கறை. அம்மாக்களுக்கு பிடிக்காதக் கறை. இன்க் கறைப் படிந்த இடத்தில ஆல்கஹால் சேர்த்து துவைத்தால் கறையை எளிதாக அகற்றி விடலாம். அப்போ அப்பாவ துவைக்க சொல்லிட வேண்டியது தானே!!!

டீக் கறைகள்

தேநீர் கறையை அகற்றுவே முடியாது என்பதெல்லாம் கட்டுக்கதை. நீரில் சர்க்கரையை கலந்து நன்கு கரைந்த பிறகு, துவைத்து எடுத்தால் தேநீர் கறையை எளிதாக அகற்றிவிடலாம்.cloth

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button