அசைவ வகைகள்

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு சாதத்தை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 200 கிராம்
பச்சை மிளகாய் – 3
சாதம் – 1 கப் உதிரியாக வடித்தது
பட்டை – 1 சிறிய துண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

* இப்போது உதிரியாக வடித்த சாதத்தை போட்டு நன்றாக கிளறி மூடி வைத்து மிதமான தீயில் 8 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.

* சுவையான உருளைக்கிழங்கு சாதம் ரெடி.201607261128559739 How to make potato rice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button