37.5 C
Chennai
Sunday, May 26, 2024
201607290906571633 How to make cabbage pakoda SECVPF
சிற்றுண்டி வகைகள்

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

வழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

முட்டைக்கோஸ் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
பூண்டு – 2 பல்
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கைப்பிடி
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.

* பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.

* சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணெயை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.

* மாலைநேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.

201607290906571633 How to make cabbage pakoda SECVPF

Related posts

பட்டர் பீன்ஸ் சுண்டல்

nathan

ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி

nathan

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்

nathan

உப்புமா

nathan

கார மோதகம்

nathan

மூங்தால் தஹி வடா

nathan

போளி

nathan

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி வடை

nathan