ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

வியர்வை நாற்றம் போக்க வழிமுறைகள்

13-1384346541-07-1383827666-showerமனிதனின் இயற்கை உபாதைகளில் ஒன்றாகவும் சிலருக்கு தர்மசங்கடத்தை தரக்கூடியதாகவும் இந்த வியர்வை நாற்றம் இருக்கிறது.

வியர்வை எவ்வாறு வருகிறது:

மனித உடலில் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இவை சருமத்தின் அடிப்பகுதியில் கானப்படும். இந்த சுரப்பிகள் உடலின் நிலையையும் வெளிப்புற தட்பவெப்பத்தையும் பொறுத்து சுரக்கும். உடல் வளர்ச்சி அடையும் பருவங்களில் வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும். தோலில் தினம் தினம் ஆயிரக்கணக்கான பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் வளர்கின்றன. இறந்த பழைய செல்கள் தோலோடு இருந்தால் அவை வாடை அடிக்கும். 

இதனால் உடலில் வியர்வை என்பது இயற்கையானதே.

உண்மையில் தூய்மையான உடலில் இருந்து வரும் வியர்வையில் நாற்றம் அதிகம் இருக்காது. ஆனால் உடலில் ஏதாவது நோய் இருந்தாலும், உணவு ஜீரணம் சரியாக இல்லாவிட்டாலும், மலஜலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலும் வரக்கூடிய வியர்வையில் நாற்றம் அதிகம் இருக்கும்.

வியர்வையை நிறுத்த இயலாது. ஆனால் வியர்வையால் ஏற்படும் நாற்றத்தை கீழ் உள்ள வழிமுறைகள் மூலம் குறைக்கலாம்.

 

வியர்வை நாற்றத்தை போக்க வழிமுறைகள்:

வியர்வை நாற்றத்திற்கு பல வகையான ஆங்கில மருந்துவகைகளும் இராசாயன பூச்சுகளும் இருக்கிறது. பொதுவாக அவ்வகை மருத்துவங்கள் பணத்தை பறிக்கும் நோக்கத்திலேயே உள்ளன.
இயற்கை மருத்துவமே உடலுக்கு நல்லது.

இந்திய ஆன்மிக உலகிலும் மருத்துவ உலகிலும் மிகப்பெரும் பங்காற்றுவது எலுமிச்சை. இது மிகப்பெரும் சக்தியும் மருத்தவ குணமும் உடையது என்பதாலேயே பெருமை பெருகிறது.
குளிக்கும் முன் அரைமணி நேரத்திற்கு முன் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து நசுக்கி அதன் சாறை உடலெங்கும் நன்றாக தேய்த்து விட்டு காத்திருக்கவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தினம்  செய்து வாருங்கள். இவ்வாறு குளிக்கும் போது சோப்பு தேவையில்லை. சோப்பு அழுக்கை மட்டுமல்ல எலுமிச்சையின் சக்தியையும் நீக்கிவிடும். இவ்வாறு எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வந்தால் உடல் நாற்றம் நாளடைவில் நீங்க ஆரம்பிக்கும். எலுமிச்சை சாற்றை தலையிலும் தேய்க்கலாம். எந்த கெடுதலும் இல்லை.

ஜவ்வாது என்ற ஒரு பொருள் நாட்டு மருந்து கடைகளிலும் காதிகிராஃட் கடைகளிலும் கிடைக்கும். அதில் மிகவும் சிறிய அளவு எடுத்து நீர்வி்ட்டு குழைத்து தேகத்திலும் உள்ளே ஆடையிலும் தடவி விட்டால் வியர்வை நாற்றம் வந்தாலும் ஜவ்வாது வாசனையில் நாற்றம் தெரியாது. இது மிகப்பண்டைய நாற்றம் போக்கும் வாசனை முறை.

மீன்கள் அல்லது இறச்சி வகைகளை வைத்து பயன்படுத்திய பாத்திரங்களை கழுவி வைத்த பின்னும் பின்பு எப்போதாவது அதில் சுடுநீர் விட்டால் அதிலிருந்து அதே மீன் அல்லது இறச்சி வாடை அடிப்பதை அறிந்திருப்பீர்கள். இது நம் உடலுக்கும் பொருந்தும். சிலவகை மீன்களை அல்லது இறச்சி வகைகளை சாப்பிட்ட பின்பு பல மணி நேரம் கழிந்தாலும் சுடுநீர் குடித்தால் அப்போது வரும் வியர்வை மிகவும் நாற்றமாக இருப்பதை காணலாம். வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால் அவ்வகை உணவுப்பொருட்களை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கலாம். வாழைப் பழங்களை அதிக அளவு சாப்பிட்டு வரவும்.

உடலில் உண்ட உணவு செரிப்பதில் கோளாறு இருந்தாலும் வரும் வியர்வையில் நாற்றம் அதிகமாக இருக்கும். அடிக்கடி மலம் மற்றும் சிறுநீரை கழித்து உணவுப்பாதையை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். இதனால் வியர்வையின் அளவும் நாற்றமும் குறைய ஆரம்பிக்கும். மலஜலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

மாதத்திற்கு ஒரு நாளாவது வெறும் பழங்களையும் நீர் ஆகாரத்தையும் மட்டும் உண்டு பழகவும். இதனால் உடல் உணவுப்பாதை சுத்தமாகும். சளி இல்லாதவர்கள் உணவில் மோர் தயிர் அதிகம் சேர்க்கவும்.

அடிக்கடி சுத்தமான சந்தணம், அதிமதுரம் இவற்றை வாயில் போட்டு மெல்லலாம். கடைகளில் கிடைக்கும் சந்தணம் பளுப்பு நிறத்தில் இருக்கும். இது கலப்படமானது. உண்மையான சந்தணம் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதிமதுரம் வேர் மாதிரி இனிப்பாக இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
ஆசிட் கலக்காத சுத்தமான பன்னீர் உடலுக்கு நல்லது.

சாதாரண நீர் அருந்துவதை விட சிறிது சீரகம் போட்டு சூடாக்கி ஆற வைத்தோ அல்லது சிறிது துளசி இலை போட்டு வைத்த குளிர்ந்த நீரையோ அருந்துவது மிகவும் நல்லது.

 

உள்ளி (சின்ன வெங்காயம்), வெங்காயம், பூண்டு (வெளுத்துள்ளி), இறச்சி, அதிக காரம் உப்பு மசாலா கலந்த உணவுப்பொருட்களை குறைக்கவும். இவை வியற்வை நாற்றத்தை அதிகப்படுத்தும்.

வியர்வை மிக அதிகமாக இருந்தால் தினம் இருமுறை குளிப்பதை வழக்கமாக கொள்ளவும். பல ஊர்களில் வாரம் ஒருமுறை மட்டுமே தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. இது மிகவும் தவறு.  நமது நாடு வெப்ப மண்டல மத்திய பகுதியில் இருப்பதால் தினமும் தலைக்கு குளிப்பது மிக நல்லது.
குளிப்பதோடு பழைய உடைகளை மாற்றிவிட்டு தூய்மையான புது உடைகளை போட்டுக்கொள்ளவும்.

நாற்றம் அதிகமாக இருந்தால் அடிக்கடி சுடுநீர்(டீ, காபி) குடிப்பதை தவிர்க்கலாம்.

சிலவகை ஆங்கில மருந்துகளை சாப்பிட்டிருந்தாலும் அதன் தாக்கத்தால் அப்போது வரும் வியர்வை நாற்றம் இருக்கலாம். சிறுநீரிலும் அதன் தாக்கம் தெரியும்.

சோப்பு போட்டு குளித்த பின் நன்றாக உடலை நீரால் கழுவிவிட்டு வெறும் உள்ளங்கையால் தோலில் அழுத்தமாய் தேய்த்தாலே அழுக்குகள் விலக ஆரம்பிக்கும்.
சாதாரண சோப்பை நிறுத்திவிட்டு மெடிமிக்ஸ், டெட்மசால் (மருந்து கடைகளில் கிடைக்கும்) போன்ற ஆண்றி பாக்ரீரியல் சோப்புகளை மட்டும்கொஞ்ச காலத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

வியர்வை சுரப்பிக்கும் பாலுணர்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சிலருக்கு உடலுறவு கொண்ட நாட்களில் அல்லது தொடர்ந்த நாட்களில் வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும்.

அடிக்கடி நீண்ட நேரம் குளிந்த நீரில் குளித்து உடல் சூட்டை தணிக்க முயலவும். வீட்டில் குளிப்பதை விட ஆறு, குளம், கடல் அருவி இவைகளில் குளிக்கும் போது இயற்கையாகவே உடல் சீக்கிரமாக தணிய ஆரம்பிக்கும்.

 

கடைசியாக நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஆளாக இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள்.

 

உணவுப்பழக்கத்தை சீர்படுத்தல், உடல் நோயை கண்டறிந்து தீர்க்க முயலுதல், உடலை எப்போதும் தூய்மையாகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க முயலுதல் இவற்றால் உடல் வியர்வையையும் அதனால் வரும் நாற்றத்தையும் தவிர்க்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button