ஆரோக்கிய உணவு

வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்

முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதத்தை எதிர்க்கும் திறன் உடலுக்கு கிடைக்கும்.

வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்
தேவையான பொருட்கள் :

முருங்கை பூ – 2 கப்,
சின்ன வெங்காயம் 50 கிராம்,
கடுகு – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
வடித்த சாதம் – 2 கப்,
மஞ்சள் தூள் – சிறதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* முருங்ககை பூவை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

* வதக்கிய பின் மிளகு தூள், மஞ்சள் தூள், முருங்கை பூ, உப்பு போட்டு கிளரவும்.

* கடைசியில் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.

* இந்த முருங்கை பூ வதக்கலை வடித்த சாதத்துடன் கலந்து கிளரவும்.

* முருங்கை பூ சாதம் ரெடி.

* முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதத்தை எதிர்க்கும் திறன் உடலுக்கு கிடைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.201608060943397357 how to make murungai poo rice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button