சிற்றுண்டி வகைகள்

இட்லி உப்புமா செய்வது எப்படி

எளிய முறையில் இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இட்லி உப்புமா செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

இட்லி – 4
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், மிளகாய், இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

* உப்பு தேவைப்பட்டால் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

* சுவையான இட்லி உப்புமா ரெடி.

* காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலையில் இப்படி செய்து அசத்தலாம்.201608060759347259 How to make idli upma SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button