சரும பராமரிப்பு

குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகள்

டயப்பர் இறுக்கத்தினால், எறும்பு கடிப்பதினால், வெயில் அலர்ஜியால், அதிகப்படியான பனியால் குழந்தைகளின் சருமத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஏற்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகள்
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. டயப்பர் இறுக்கத்தினால், எறும்பு கடிப்பதினால், வெயில் அலர்ஜியால், அதிகப்படியான பனியால் என்று இப்படிப் பல காரணங்களால் குழந்தைகளின் சருமத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஏற்படும். இந்தப் பிரச்சனைகளால் குழந்தைகள் பாதிக்கப்படாத படி, பெற்றோர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் அனைத்துத் துணிகளையும், மெல்லிய சோப்பு கொண்டு துவைத்தல், மிதமான வெந்நீரில் குளிக்க வைத்தல், தோல் சம்பந்தமான தரமான பொருட்களை உபயோகித்தல், டயப்பரை அடிக்கடி மாற்றுதல் ஆகியவை மூலம் குழந்தைகளின் சருமப் பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் கொடுப்பதும் சிறந்தது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குழந்தையின் தோலுக்கு நல்லது மட்டுமல்லாமல், நன்றாகத் தூங்கவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.

டயப்பர் இறுக்கமாக இருக்கும் போதும், அதை நீண்ட நேரத்திற்கு மாற்றாமல் இருக்கும் போதும் குழந்தைகளின் தோலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே டயப்பரை அடிக்கடி செக் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சில கிரீம்களைப் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.

பால் பருக்களும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்பு தான். இதற்காக எந்த சிகிச்சையும் மேற்கொள்ளத் தேவையில்லை. ஒரு சில நாட்களில் அது தானாகவே மறைந்துவிடும்.

தோல் தடிப்பு குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சம்பந்தமான ஒரு பாதிப்பாகும். குடும்பத்தில் யாருக்காவது ஆஸ்துமாவோ, அலர்ஜியோ இருந்தால் அது குழந்தையைப் பாதிக்கும். முகம், முழங்கை, மார்பு அல்லது தோள்பட்டைகளில் இந்தப் பாதிப்பு வந்து, மிகவும் நமைச்சலைக் கொடுக்கும்.

பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போதே வறட்சியான தோலோடுதான் பிறக்கின்றன. பிறந்த சில நாட்களில் அவை அப்படியே உரிந்து, மறைந்து விடும். எதற்கும் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்து கொடுப்பது நல்லது.

கழுத்து, அக்குள், அல்லது டயப்பர் மாட்டும் பகுதிகளில் ஏற்படும் வியர்வை காரணமாக இளஞ்சிவப்பு நிறத்தில் குழந்தைகளில் சருமத்தில் திட்டுத்திட்டாக வரும். குழந்தையை எப்போதும் கூலாக வைத்திருங்கள். இறுக்கமான உடைகளையோ, ஆறு மாதங்கள் வரை அதிகம் பவுடர் போடுவதையோ தவிருங்கள்.

குழந்தைகளின் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபடும் போது, சில இடங்களில் வெள்ளை வெள்ளையாகத் திட்டுக்கள் தோன்றும். ஒரு சில நாட்களில் அந்தச் சுரப்பிகள் திறந்து கொள்ள, திட்டுக்கள் மறைந்து போகும்.201608050913506258 Skin problems in children SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button