முகப் பராமரிப்பு

அம்மா தன் பெண்ணிற்கு சொல்லும் அழகின் ரகசியங்கள்!

ஒரு தாய்க்குதான் தெரியும் தன் குழந்தைக்கு எது தேவை என்று.(அழகு சம்பந்தபட்ட பதிவு மட்டுமே). ஒரு பெண் குழந்தை வளர வளர அவளது டீன் ஏஜில் அவளின் சிறந்த தோழியாய் அவளது அம்மாவாகத்தான் இருப்பாள். நல்லது கெட்டது என பார்த்து சொல்லும் வழிகாட்டியாய் இருப்பதில் அந்த தாயிற்கும் பெருமைதானே.

மரபு ரீதியாக தாயின் நிறம், சருமம், அழகு எல்லாம் ஏறக்குறைய மகளுக்கு வருகிறது. தன்னுடைய அனுபவத்தில் தாய் சொல்வதை எல்லாம் நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு உங்களுக்கு நஷ்டத்தை தரும்.

சரும பராமரிப்பு என்று வரும்போது அம்மாவிற்கு நிச்சயம் அவள் குழந்தையின் சருமம் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இது வேண்டாம். உன் சருமத்திற்கு உகந்ததில்லை என்று அம்மா சொன்னால் சமர்த்தாக மகள் கேட்டுக் கொண்டால் சருமம் தப்பித்தது. இல்லையெனில் வேண்டாத பாதிப்புகளை சருமத்திற்கு உண்டாக்கும்.

அம்மா சொல்லும் சின்ன சின்ன அழகு குறிப்புகள் டீன் ஏஜ் வயதினருக்கு மிகவும் உபயோகமாகவும், சிம்பிளாகவும் இருக்கும். அனுபவத்தில் வரும் அனைத்துமே காது கொடுத்து கேட்டுக் கொண்டால் நலமே. இங்கு ஒவ்வொரு அம்மாவும் தன் மகளுக்கு சொல்லும் அழகு குறிப்புகளை பார்ப்போமா?

ஓவர் மேக்கப் முகத்திற்கு ஆகாது :

உங்கள் அம்மா உங்களிடம் எப்போதும் ஒரு விஷயத்தை சொல்லியிருப்பார்கள், கவனித்தீர்களா? மேக்கப் அதிகமாய் போடாதே. சருமம் பாழாகிவிடும் என்று. அது நூற்றுக்கு நூறு உண்மைதான். டீன் ஏஜ் வயதில் சருமம் மிகவும் இளகி, மிருதுவாய் இருக்கும்.

அப்போது எந்த வித மேக்கப்பும் தேவையே இல்லை. அழகு சாதங்களில் இருக்கும் கெமிக்கல் பூச்சுக்களை சருமத்தால் தாங்க முடியாது. அலர்ஜியை ஏற்படுத்தும். சருமம் இப்படித்தான் முதலில் பாதிக்க ஆரம்பிக்கும்.

சன் ஸ்க்ரீன் லோஷன் :

பள்ளி, கல்லூரி, ட்யூஷன் என எங்கே சென்றாலும் உங்கள் அம்மா சன் ஸ்க்ரீன் லோஷன் போட அறிவுரை கூறியிருந்தால் அது மிகச் சரியே. ஏனெனில் சூரிய கதிர்களிடமிருந்து வரும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சுக்கள் முதலில் பாதிப்பது சருமத்தைதான். ஆகவே வெளியே கிளம்பும் முன் சன் ஸ்க்ரீன் லோஷன் மறக்காமல் போட்டுச் செல்லுங்கள்.

மேக்கப் அகற்ற வேண்டும்:

நீங்கள் கல்லூரிக்கு குறைந்த பட்ச மேக்கப் போட்டு சென்றாலும் கூட மாலையில் வந்தவுடன் உங்கள் அம்மா முகம் கழுவ சொல்வார்கள். காரணம் அழகுசாதனத்தினாலும் சுற்றுபப்புற சூழலினாலும் உங்கள் சருமத்தில் அழுக்கு சேர்ந்திருக்கும்.

நாள்தோறும் அதனை அகற்றி விட்டால், உங்கள் சருமம் முகப்பரு, எண்ணெய் வடிதல் இன்றி தூய்மையாகவே இருக்கும். ஆகவே வெளியில் எங்கு சென்று வந்தாலும் முகத்தினை கழுவிவிடுங்கள்.

தினமும் தலைக் குளியல் கூடாது :

உங்கள் அம்மா தலைக்கு குளித்தாலே திட்ட ஆரம்பிப்பார்களே. ஜலதோஷம் பிடித்துவிடும் , முடி பாழாகும் என்று சொல்வார்களே. இதற்காக அம்மாவை கோபித்துக் கொள்ளாதீர்கள். அது உண்மைதான்.

உங்கள் கூந்தலில் இயற்கையான எண்ணெய் சுரக்கும். அது கண்டிஷனராக உங்கள் தலை முடியினை பாதுகாக்கும். ஆனால் தினமும் தலைக்கு குளித்தால் அந்த எண்ணெய் சுரப்பு குறைந்து கூந்தலில் வரட்சி, பிளவு ஏற்பட்டு முடி உதிர ஆரம்பிக்கும். உங்கள் அம்மா சொன்னது உண்மைதானே.

இயற்கை ஸ்க்ரப்பர் :

நீங்கள் விளம்பரங்களில் வரும் ஸ்க்ரப்பர் வேண்டுமென்று உங்கள் அம்மாவிடம் நச்சுவீர்கள். ஆனால் அம்மா அதெல்லாம் எதற்கு? சருமம் பாழாகும் என்று கோபிப்பார். நீங்கள் அதற்காக முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டாம். அவரிடம் கேட்டுப் பாருங்கள். கடலை மாவு , பயித்தம் மாவு சிறந்தது என்பார். அது நிச்சயம் ஏற்கப்பட வேண்டியது ஒன்று. ஏனெனில் அவை இயற்கையான ஸ்க்ரப்பர். சருமத்தில் இருக்கும் அழுக்களை நீக்கி சுத்தப்படுத்தும். சருமத்திற்கு பக்க விளைவுகளைத் தராது.

கல்லூரி செல்லும் எல்லா பெண்களிடமும் அம்மா சொல்லும் மற்றொரு விஷயம் அக்குள் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பது.

கிருமிகள் அதிகமாகி தொற்றுக்களை ஏற்படுத்தும் பகுதிகளில் அதுவும் உண்டு. ஆகவே அம்மா சொல்லும் சின்ன சின்ன அழகுக் குறிப்புகளை ஏற்று நீங்களும் பின்பற்றினால், உங்கள் அழகு எப்போதும் காக்கப்படும் என்பது உண்மை.

2 23 1464002621

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button