26.7 C
Chennai
Wednesday, Feb 5, 2025
sponchcake
கேக் செய்முறை

ஸ்பாஞ்ச் கேக் : செய்முறைகளுடன்…!​

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – கால் கிலோ
சீனி – கால் கிலோ
வெண்ணெய் – கால் கிலோ
முட்டை – 5
நெய் – ஒரு ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 15
கிஸ்மிஸ் – 20
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

முட்டையில் உப்பு போட்டு, முட்டை கலக்கும் கரண்டியால் நுரை பொங்க கலக்க வேண்டும்.
சீனியை பொடி செய்து அத்துடன் வெண்ணெய் சேர்த்து, அதே கரண்டி கொண்டு, க்ரீம் பதத்தில் கலக்கவேண்டும்.
மைதாவையும் பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, கலக்கிய முட்டை, வெண்ணெய் சீனி கலவை அனைத்தையும் மைதாவுடன் நன்றாக கலக்கி, கிஸ்மிஸ், பாதி முந்திரிப்பருப்பு, எசன்ஸ் போட்டு கலந்துக் கொள்ளவேண்டும்.
இந்த கலவையை 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பிறகு கேக் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, பேப்பரில் நெய் தடவி இதை ஊற்றி எலக்ட்ரிக் ஓவனில் மீடியம் டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்து, பிறகு மீதி உள்ள முந்திரிப்பருப்புகளை மேலே அலங்காரமாக போட்டு, மீண்டும் ஓவனில் 15 நிமிடங்கள் வைக்கவேண்டும்.
பிறகு ஒரு சுத்தமான குச்சியினால் கேக் நடுவில் குத்திப் பார்த்து, கேக் வெந்து விட்டதை உறுதிசெய்த பிறகு, வெளியே எடுத்து ஆறவிட்டு, பிறகு கட்டங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.sponchcake

Related posts

சுவை மிகுந்த கோகோ கேக் செய்ய தயாரா….

nathan

கிறிஸ்துமஸ் பிளம் கேக்

nathan

எக்லெஸ் சாக்லெட் கேக்

nathan

சீஸ் கேக்

nathan

இதோ சுவையான சாக்லெட் புடிங்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

மைதா வெனிலா கேக்

sangika

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்

nathan