தலைமுடி சிகிச்சை

படுக்கும் முன் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்

கூந்தல் நன்கு வளர, படுக்கும் முன் இந்த முறைகளை பின்பற்றி பராமரித்தால் கூந்தல் நன்கு வளரும்.

படுக்கும் முன் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்
* தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்

* படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

* வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம். இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.

* கூந்தல் நன்கு வளர படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.

* நீண்ட கூந்தலை கொண்டவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக்கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும். மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.201608081202417364 Instructions Caring for hair before going to bed SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button