சாலட் வகைகள்

பஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் – 1/2 கிலோ (வெண்டைக்காய் இலசாக சிறியதாக இருக்க வேண்டும்.),
சீரகத்தூள் வறுத்து பொடித்தது – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன்,
தேவையானால் இடித்து தட்டிய தனியா – 1 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கெட்டியாக அடித்த தயிர் – 2 கப் அல்லது தேவைக்கு,
அலங்கரிக்க நீட்டு வாக்கில் வெட்டிய இஞ்சி,
பச்சை மிளகாய் – 4-6 காரத்திற்கு ஏற்ப,
சீல் செய்வதற்கு தனியாக கடலைமாவு – 1/2 கப்.

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து துடைத்து நீளவாக்கில் கீறி வைக்கவும்.

பூரணத்திற்கு…

வெண்டைக்காய், தயிர் தவிர மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். மேல் கொடுத்துள்ள தூள்கள் அனைத்தையும் சிறிது உப்பு கலந்து கீரிய வெண்டைக்காய் உள்ளே ஒரு டீஸ்பூன் வைத்து சமமாக பரப்பி நிரப்பி வைக்கவும். கடலை மாவை கெட்டியாக கரைத்து அதை பூரணம் வைத்தப்பின் சீல் செய்து வைத்துக் கொள்ளவும். பின் எண்ணெயை காய வைத்து கொஞ்ச கொஞ்சமாக வெண்டைக்காய்களைப் பொரித்து வடித்து ஒரு தட்டில் வைக்கவும். பரிமாறும் போது தயிரில் சிறிது உப்பு சேர்த்து அடித்து தட்டில் இருக்கும் வெண்டைக்காயின் மேல் ஊற்றி சிறிது சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி அலங்கரித்து அதன் மேல் வதக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து பரிமாறவும். சூப்பரான தஹி பிந்தி ரெடி.

Related posts

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி

nathan

கேரட் – வெள்ளரி சாலட்

nathan

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

nathan