மருத்துவ குறிப்பு

பெண்களே கேமராக்கள் உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்

கையடக்க கேமராக்கள், மொபைல் வீடியோ கேமராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச்சிறிய கேமராக்கள் என்பது இன்றைய நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைகளில் கூட உலா வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புக்களை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி.

மொபைல் கேமராக்கள், கையடக்க வீடியோ கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய,தனியாக தமது காரியங்களை நிறைவேற்றக்கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் கேமராக்கள்

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகிவருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பர்தா அணியும் பெண்கள் இதுபற்றி கவலைபடவேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக்கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில்

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருகிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை கேமராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொது கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொது குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும் கழிப்பறை குளியலறைளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும், தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகளில் கவனம் தேவை

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளில் தங்களின் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், மருத்துவ காரணங்களுக்காக தங்களின் ஆடைகளை விலக்கும்போதும் கவனமாக இருங்கள். கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று ஏதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனத் தேவை. உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக்கொள்ளவேண்டும்.

இப்படிதான் ஒரு மருத்துவர் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பபெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து தனியறைக்கு எடுத்துபோய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து வீடியோவாகவும் புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு இந்த குடும்பப்பெண்களின் அலங்கோல புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளில்

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளை போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளை பயன்படுத்தும் பெண்கள் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். அங்கு கண்டிப்பாக தங்களை கண்காணிக்க கேமராக்கள் பொரத்தப்பட்டிருக்கும். வேறுநோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும்..

கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு. இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மடடுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும் ஆனால் மறுபக்கதிலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் நம்மை காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.

இந்த உடைமாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கருத்தில் கொண்டு செயல்படவும். நம்மையறியாமலே நம்மை படம், வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் பகிர்ந்துகொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதுபோன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக்கொள்ளவும் தக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.855534381

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button