sl3723
சிற்றுண்டி வகைகள்

முழு தம் காலிஃப்ளவர்

என்னென்ன தேவை?

நடுத்தர காலிஃப்ளவர் – 1,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 1 விழுதாக அரைக்கவும்,
இஞ்சி-பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – ஒரு சிட்டிகை,
முந்திரி வறுத்தது – 10,
விழுதாக அரைத்தது – 10,
எண்ணெய், உப்பு – தேவைக்கு,
பிரிஞ்சி இலை – 1,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,

அலங்கரிக்க –

பச்சைமிளகாய்,
விருப்பப்பட்டால் பச்சைப்பட்டாணி,
சீஸ் – 1/4 கப்,
மல்லித்தழை – சிறிது,
துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

காலிஃப்ளவரை சுத்தப்படுத்தி சிறிது நேரம் முழுதாக உப்பு, மஞ்சள் தூள் தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இந்த முழு பூவை அதில் போட்டு 2 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். பூ பாதி வெந்து இருக்க வேண்டும். பின் மெதுவாக வடித்து பூவை மட்டும் எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சிறிது சீரகம் சேர்த்து தாளித்து அதில் வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் தக்காளி விழுது, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், மற்ற எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாக ேசர்த்து வதக்கி, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, முந்திரி விழுதையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிரேவியாக வந்ததும், வடித்து வைத்த கோபியை ஒரு குழியான கிளாஸ் போல் வைத்து இந்த கிரேவியை மேலே ஊற்றவும். அதன் மேல் பச்சைபட்டாணி, துருவிய சீஸ் சேர்த்து அவனில் 10 நிமிடம் பேக் செய்யவும் அல்லது மைக்ரோவேவ் அவனில் கீர், சீஸ் கரையும் வரை வைத்து எடுத்து முந்திரி பச்சை மிளகாய், மல்்லித் தழை கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். sl3723

Related posts

சூப்பரான மிகுந்த கோஸ் வடை

nathan

சத்தான மிளகு அடை

nathan

அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

nathan

பொரி உருண்டை

nathan

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்

nathan

பிரட் ஆனியன் பொடிமாஸ்

nathan

உப்புமா

nathan