முகப் பராமரிப்பு

முகத்தில் தேவையற்ற முடிகளை,வீட்டிலேயே நீக்க ஈஸியான வழிகள் இங்கே!

முகம் அழகாக இருந்தாலும், முகத்தில் உதட்டிற்கு மேல் மற்றும் கன்னப்பகுதிகளில் தேவையில்லாமல் முடிகள் வளர்ந்தால், சற்று அசௌகரியமானதே.

பெண்களுக்கு ஏற்படும் இந்த தேவையற்ற முடி வளர்ச்சியை பூனை முடி என்று கூறுவார்கள். வெளியில் பேச கூச்சமாகவும் இருக்கும். ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும். இதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று, த்ரெட்டிங், மற்றும் கெமிக்கல் கலந்த ரிமூவர் உபயோகபடுத்தினால், முடி இன்னும் வளர்ந்து முகத்தை பாழாக்கி விடும்.

எனவே பூனை மீசை வளர்ந்தால் உடனே பார்லர் சென்று விடாதீர்கள். வீட்டிலேயே இதனை எளிதில் அகற்ற முயற்சி செய்யுங்கள்.

டீன் ஏஜ் வயதினருக்கு :

பூனை முடி வளர்ச்சி டீன் ஏஜில் சிலருக்கு வந்தாலும், காலப்போக்கில் உதிர்ந்துவிடும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டியது தூங்கும் முன் இரவில் தினமும் மஞ்சள் பூசி வந்தால் போதும். ஒரு மாதத்தில் முடி உதிர்ந்து விடும்.

இனி எப்போதும் முடி வளராது என்பது உறுதி. அதுமட்டுமில்லாமல், பயித்தம் மாவில் கஸ்தூரி மஞ்சள் கலந்து தினமும் குளித்துப் பாருங்கள். உடல் முழுவதும் முடி வளர்ச்சி இல்லாமல் மொழு மொழுவென இருக்கும்.

ஹார்மோன் மாற்றம் :

இதைத் தவிர்த்து ஹார்மோன் மாற்றத்தினாலும், குறைபாட்டினாலும், உதட்டிற்கு மேல், கன்னத்தில், நாடியில் என வளரும். ஆன்ட்ரோஜன் என்ர ஹார்மோன் அளவு அதிகமானாலும் இப்படி தேவையற்ற ரோமங்கள் வளரும். இதற்கு நீங்கள் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்வது முக்கியம்.

அது ஒருபக்கம் இருக்க, இந்த வளரும் முடிகளை என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள். இதோ, கெமிக்கல் இல்லாத, பக்க விளைவுகள் இல்லாத, வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு உங்களுக்கான எளிய வழிகள் இங்கு சொல்லப்படுகிறது. தொடர்ந்து படியுங்கள்.

சர்க்கரை வாக்ஸ் :

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை எடுத்து, அதில் தேன் மற்றும் ஒரு கப் நீரினை சேர்த்து கலக்குங்கள். பின்னர் கைகளில் ஒட்டும் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். வெதுவெதுப்பாய் ஆனவுடன் ரோமங்கள் இருக்கும் பகுதிகளில் இந்த வாக்ஸை தேயுங்கள்.

ஒரு கெட்டித் துணியை அதன் மேலே போட்டு அழுத்தி, நன்கு ஒட்டிய துணியை முடி வளர்ச்சிக்கு எதிர்ப்புறமாக இழுங்கள். அந்த துணியில் கையோடு முடி வந்துவிட்டிருக்கும். இதனால் வலி ஏற்படாது. சருமத்திற்கும் பாதுகாப்பு.

கொண்டைக் கடலை மாவு

கொண்டைக்கடலை ரோம வளர்ச்சியை தடுப்பதோடு, சருமத்திற்கு போஷாக்கு அளித்து, மிருதுவாகும். அதனால் ரோமம் வளர்ந்த இடங்களில் கடினத்தன்மை இல்லாமல் இருக்கும்.

கொண்டைகடலையை பொடித்து, அதனுடன், பால், மற்றும் மஞ்சளை சேர்த்து, கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் போட்டு, 20 நிமிடங்கள் காய விடவும். காய்ந்தபின், கழுவவும். இதனை வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால், நாளடைவில் தேவையற்ற முடி உதிர்ந்துவிடும். சருமம் பளிச்சிடவைக்கும்.

பார்லி ஸ்கரப் :

பார்லியை ரவை போல பொடித்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் காலை மாலையில் ஸ்கரப் போல முகத்திலிருக்கும் முடிகள் மீது தேயுங்கள். நாளடைவில் அவைகள் சுருங்கி, உதிர்ந்து விடும்.

புதினா டீ :

உடலில் ஆன்ட்ரோஜன் சுரப்பு அதிகமானால், முகத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி காணப்படும். புதினா ஆன்ட்ரோஜன் சுரப்பினை கட்டுப்படுத்துகிறது. தினமும் புதினா டீ அல்லது உணவில் அதிகமாக புதினா சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும்படியாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.

ஓட்ஸ் ஸ்க்ரப் :

ஓட்ஸ் ஸ்கரப் எளிதில் ரோம வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. ஓட்ஸுடன், தேன், எலுமிச்சை சாறு சில துளி கலந்து, முகத்தில் நன்றாக தேயுங்கள். காய்ந்த பின் கழுவலாம். தினமு செய்து வந்தால், வேகமாக பலன் தரும்.

முட்டையின் வெள்ளைக் கரு, சோள மாவு :

முட்டையின் வெள்ளைக் கருவில், ஒரு ஸ்பூன் சோள மாவு, மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை ஆகியயவற்றை கலந்து கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை பீல் ஆஃப் போல பயன்படுத்தலாம். முகத்தில் மெல்லிய லேயராக பூசி, காய்ந்தபின் உரித்தால் முடிகளும் சேர்ந்து அப்படியே வரும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை மாஸ்க்:

முகத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வினை தரும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் நன்றாக தேயுங்கள். வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்தால் வேகமாய் பலன் தரும்.

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை ஷேவ் செய்தோலோ, த்ரெட்டிங் செய்தாலோ திரும்ப திரும்ப வரும். அதனால் தனை நிரந்தரமாக போக்க, மேலே கூறிய வழிகளைப் பின்பற்றுங்கள். நாளடைவில் முகம் கிளியராய் மாசில்லாமல் இருக்கும்.

1 26 1464243674

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button