எடை குறைய

உடல் எடை… பெண்களே கவனம்…

புகுந்த வீட்டுக்கு ‘ஸ்லிம்மா’க போகிற பெண்கள் கொஞ்சநாளில் ‘புஷ்டி’யாக மாறிடுறாங்க… இதுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் வேற… அவர்கள் செய்யும் தவறே அதிக எடை கூடுவதற்கு காரணமாகிறது.

* சமைக்கும் போது, டேஸ்ட் பாக்குறேன், லைட்டா பசிக்குது இப்படி பலவித காரணங்களை சொல்லி உடனடி பிரேக் ஃபாஸ்ட்ல ஆரம்பிச்சு மினி மீல்ஸ், ஈவ்னிங் குட்டியா ஸ்நாக்ஸ்னு கிச்சன்ல சாப்பிட்டுகிட்டே சமைக்கறீங்களா..? குடும்பத்துல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம் மிச்சமாகுற உணவை சாப்பிடுவது போன்ற பழக்க வழக்கங்கள் தொடரும் பட்சத்தில், பெண்கள் தங்களது நாற்பது பிளஸ் வயதில் மெடிக்கல் பில்லுக்கு தனி பட்ஜெட் போட வேண்டி வரும் பெண்களே…

* வீட்டில் அம்மி, உரல்னு எல்லாம் இருந்தால் அதை பயன்படுத்துங்க. கிரைண்டர், மிக்சின்னு போனா, சில ஆண்டுகளுக்கு பின்னர் உடல் எடையை குறைக்க ‘ஜிம்’முக்குத்தான் போக வேண்டும்.

* காலையில் ஆரம்பிச்சு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் மதியமே முடிச்சிட்டு, லஞ்ச், டின்னர்னு எல்லாமே டி.வி முன்னாடி உட்கார்ந்த இடத்துலயே பண்றது, மதிய சாப்பாட்டுக்கு பின்னாடி தூக்கத்தை வழக்கமாக்குறது போன்றவற்றை இன்றே கைவிட்டுங்கள். அதற்கு பதிலாக ஹோம் க்ளீனிங், கார்டனிங்னு சின்ன சின்ன வேலை பாத்தீங்கன்னா நீங்கள் பிட்டாக இருப்பீர்கள்.

* தினமும் மூன்று முறைக்கு மேல் காபி, டீ குடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக சமையலுக்கு காய்கறி வேக வைக்கும்போது, கூடுதலாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து, காய்கறி சூப் தயார் செய்து குடிக்கலாம். இதனால் ஆரோக்கியமும், அழகும் நிரந்தரமாக இருக்கும்.

* வேலைக்கு போகாம வீட்லயே இருந்தாலும், வீடு பெருக்க, துடைக்க, துணி துவைப்பது போன்ற வேலைகளை சோம்பேறித்தனம் இல்லாமல் பார்த்தால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

* குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது துவங்கி அருகிலிருக்கும் கடைக்குகூட இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் பழக்கத்தை தவிர்த்து, இது போன்ற சிறு விஷயங்களுக்காக குறைந்த பட்சம் ஒரு நாளில் 2-3 கி.மீ தூரம் நடக்க பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குழந்தைகளை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்.weight

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button