ஆரோக்கியம் குறிப்புகள்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்

எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்
எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோகிராம் செம்பு அவசியமானது. இத்தகைய செம்பு தினமும் 2-3 டம்ளர் நீரை செம்பு பாத்திரத்தில் குடிப்பதன் மூலம் எளிதில் கிடைக்கும்.

செம்பு உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் செயலில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செம்பு பாத்திரத்தில் நீரைக் குடித்து வருவது நல்ல பலனைத் தரும். மேலும் செம்பு கொழுப்புக்களை உடைப்பதில் இடையூறை உண்டாக்கும் நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும்.

கர்ப்ப காலத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால், கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்து, பிறப்பு குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்கலாம். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

செம்புவில் ஆற்றல்மிக்க உயிர்க் கொல்லி பண்புகள் உள்ளதால், இது உடலினுள் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுக்களை அழித்து, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

செம்பு இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுவதால், உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதோடு இரும்புச்சத்து குறைபாடும் ஏற்படும். மேலும் செம்பு புதிய இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, இரும்புச்சத்தின் அளவை சீராக பராமரிக்கும்.

உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும். செம்பு இயற்கையாகவே ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இது தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் புரோஸ்டாகிளான்டின்ஸ் உற்பத்தியை அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும். 201608121004358219 copper important for your health SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button