சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

உப்பு சீடை செய்வது மிகவும் சுலபமானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை
தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 2 கப்
உளுத்த மாவு – ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
எள் – கொஞ்சம்
பெருங்காயப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :

* முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு உலர்த்தி வைக்கவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். * அரிசி காய்ந்ததும், மிக்சியில் அல்லது மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து, சலித்து வைக்கவும்.

* எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்

* ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு, வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணெய் நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும். மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டியாக).

* ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணெய் தடவிய தட்டில் சின்ன சின்னதாக ‘சீடை’ யாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

* அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* ‘கரகர’ ப்பான ‘மொறு மொறு’ ப்பான ‘உப்பு சீடை’ ரெடி.

குறிப்பு:

* இதில் துளி கல், மண் இருந்தாலும் சீடை வெடிக்கும். ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது.

* இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.201608131411293909 how to make uppu seedai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button