34.4 C
Chennai
Wednesday, Jul 24, 2024
sl4505
கேக் செய்முறை

மாம்பழ கேக் புட்டிங்

என்னென்ன தேவை?

நல்ல தரமான நன்கு பழுத்த மாம்பழம் பெரியது – 1,
டின் பால் (மில்க்மெய்டு) – 1 கப்,
கெட்டிப் பால் – 1 கப் (முழு க்ரீம் பால்),
ரெடிமேட் வெஜிடேரியன் கேக் சதுரமாக – 6 துண்டுகள்.

அலங்கரிக்க…

பாதாம், பிஸ்தா சீவியது – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய மாம்பழத்துண்டுகள்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாலை சுண்டக் காய்ச்சவும். இது கெட்டியாக வரும்போது டின் பாலை சேர்த்து சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும். அந்த ஒரு மாம்பழத்தில் பாதியை அலங்கரிக்க வைக்கவும். மீதி பாதியை துண்டுகள் போட்டு மிக்சியில் அடித்து விழுதாக எடுத்து, இறக்கி வைத்த பால் கலவையில் சேர்த்து கலக்கவும். இப்போது ஒரு கண்ணாடி டிரேயில் முதலில் சிறிது
வெண்ணெய் தடவி கேக்கை சதுரமாக வெட்டி அதில் அடுக்கி, அதன் மேல் இந்த மாம்பழம், க்ரீம் பால், டின் பால் கலவையை ஊற்றவும். பிறகு அதன் மேல் சீவிய நட்ஸ், மாம்பழத் துண்டுகள் தூவி அலங்கரித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து 1 மணி நேரத்திற்கு பின் பரிமாறவும். டின்னர் அல்லது லஞ்சுக்கு பின் பார்ட்டியில் பரிமாறலாம்.

குறிப்பு:

வீட்டில் முட்டை யில்லாத கேக்கை செய்தால் பயன்படுத்தலாம். விருப்பமான பழங்களைக் கொண்டும்
செய்யலாம்.sl4505

Related posts

ஜெல்லி கேக்

nathan

முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் (ஜெர்மனி)

nathan

பனீர் கேக்

nathan

ருசியான சாக்லேட் கேக் தயார்…

sangika

தீபாவளி ஸ்பெஷல்: சாக்லேட் சிப்ஸ் கேக்!

nathan

மைதா  ஃப்ரூட்  கேக்

nathan

கோதுமை வாழை கேக்

nathan

மினி பான் கேக்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்

nathan