மருத்துவ குறிப்பு

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் கழற்சிக்காய்

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், வலியுடன் கூடிய மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவம் குறித்து காணலாம்.ஆடா தோடை இலையை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடா தோடை, சீரகம், பனங்கற்கண்டு. ஆடா தோடை இலையை அரைத்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி மாதவிலக்கு சமயத்தில் காலை, மாலை குடித்துவர வலி குணமாகும். ஆடா தோடை அதிக ரத்தப்போக்கை நிறுத்தும். வலியை தணிக்க கூடிய தன்மை கொண்டது. கழற்சிக்காயை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கழற்சிக்காய், மிளகு, மோர். 4 பங்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

இதிலிருந்து அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவர வலியுடன் கூடிய மாதவிலக்கு பிரச்னை சரியாகும். நீர்கட்டி, நார்கட்டி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்போக்கு குணமாகும். மாதவிலக்கு பிரச்னைக்கு கழற்சிக்காய் அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திருநீற்று பச்சை, வெந்தயம், பனங்கற்கண்டு. அரை ஸ்பூன் வெந்தய பொடியுடன், திருநீற்று பச்சிலை அரைத்து சாறு எடுத்து 2 ஸ்பூன் சேர்க்கவும்.

இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி, மாதவிலக்கு சமயத்தில் காலை, மாலை சுமார் 50 மில்லி அளவுக்கு எடுத்துக் கொண்டால் வலி சரியாகும். வெந்தயத்தில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. குளிர்ச்சியை கொடுக்கும் தன்மை கொண்டது. நார்சத்து உடையது. வலியை குறைக்கும். திருநீற்று பச்சை குளிர்ச்சியானது. வலியை போக்கும் தன்மை கொண்டது.

மாதவிலக்கு சமயத்தில் வலி இருந்தால் விளக்கெண்ணெய்யை அடி வயிற்றில் பூசி மசாஜ் செய்யலாம். கால் கட்டை விரலில் விளக்கெண்ணெய்யை தடவி வைத்தால் வலி சரியாகும். கை, கால்களில் மருதாணி இலையை வைக்கும்போது குளிர்ச்சி ஏற்படும். இதை தவிர்ப்பதற்கான மருத்துவத்தை பார்க்கலாம். மருதாணியுடன் சிறிது நீலகிரி தைலத்தை சேர்த்து பயன்படுத்தும்போது உடலில் குளிர்ச்சி ஏற்படாது. 6WVO8he

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button