ஆரோக்கிய உணவு

உடல் சூட்டை குறைக்கும் வெந்தயக்களி

உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்கவேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உடல் சூட்டை குறைக்கும் வெந்தயக்களி
தேவையான பொருட்கள் :

வெந்தயம் – 500 கிராம்
பச்சரிசி மாவு – 200 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 100 கிராம்
சுக்குதூள் – அரை தேக்கரண்டி
ஏலக்காய் – 2 (தூளாக்கவும்)
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* ஏலக்காய், வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி கொள்ளவும்.

* வெந்தயத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு தூளாக்குங்கள்.

* அரிசி மாவில், வெந்தய மாவு, தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

* பாத்திரத்தில் வெல்லத்தைக்கொட்டி நீர் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டி எடுக்கவும்.

* கரைத்து வைத்துள்ள மாவை அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். கைவிடாமல் கிளற வேண்டும்.

* வெந்து வரும்போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகுவை கலந்து கிளறவேண்டும்.

* மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம்.

* கடைசியாக பின்பு அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள்.

* லேசான சூட்டில் சாப்பிடுங்கள்.

* இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல்சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகும். அதனால் அவர்கள் மெலிந்துபோவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்கவேண்டும். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும். எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும்.
201608151124156250 vendhaya kali Reducing body temperature SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button