சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான கோதுமை உசிலி

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான சுவையான கோதுமை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான கோதுமை உசிலி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
முழு உளுந்து – அரை கப்
கடலைப்பருப்பு – கால் கப்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

* உளுந்து மற்றும் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேக வைக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, எடுக்கவும்.

* வாணலியில் கடுகு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, அரைத்த பருப்புக் கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் வதக்கி எடுத்தால், சுவையான கோதுமை உசிலி தயார்.

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஒரு சத்தான உணவு இது.201608150828334182 Nutritious tasty wheat Ammini Kozhukattai usili SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button