தலைமுடி சிகிச்சை

தலை அரிப்பு, கூந்தல் வறட்சிக்கு என்ன செய்யலாம்

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது இந்த சிகிச்சை.

தலை அரிப்பு, கூந்தல் வறட்சிக்கு என்ன செய்யலாம்
தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது இந்த சிகிச்சை. அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம்,
வெந்தயம் – 100 கிராம்,
பிஞ்சு கடுக்காய் – 10 கிராம்,
வால் மிளகு – 10 கிராம்,
பச்சை பயறு – கால் கிலோ..

எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இருமுறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

தலையின் வறட்டுத்தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை. உலர்ந்த

ஆரஞ்சு தோல்,
துண்டுகளாக்கிய வெட்டிவேர்,
சம்பங்கி விதை,
பூலான் கிழங்கு.
கடலை பருப்பு,
பயத்தம் பருப்பு,
கசகசா.

இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப்பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்வதால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.201608201042526165 Head itching hair dryness beauty tips SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button