ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸ்

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயமாக அருந்த வேண்டிய அருமையான ஒரு ஜூஸ் இது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸ்
தேவையான பொருட்கள் :

பாகற்காய் – 100 கிராம்
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை தேக்கரண்டி

செய்முறை :

* பாகற்காயை கழுவி விட்டு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* நறுக்கின பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நுரை பொங்க அடிக்கவும்.

* நன்கு அரைத்த பாகற்காயை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளவும்.

* பாகற்காய் ஜூஸில் மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்துக் குடிக்கவும். அவ்வளவாக கசப்பு தெரியாது.

* சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயமாக அருந்த வேண்டிய அருமையான ஒரு ஜூஸ். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட சேர்த்து கொள்ளலாம்.201608200821427203 Bitter gourd juice for diabetic patients SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button