ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ள 5 வழிகள்:

Tomatoஏதாவது வேடிக்கையான ஒன்று பாருங்கள்:

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகுமாம், எனவே வாய் விட்டு சிரியுங்கள் ஒருவேளை உங்களை சிரிக்க வைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், சிரிப்பு சிகிச்சையை மேற்கொள்வது நன்மை பயக்கும். நம் அனைவரும் பிடித்த காமெடி படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எதாவ்து ஒன்று இருக்கும். எத்தனை முறை பார்த்தோம் என்பதை விட, எவ்வளவு முறை பார்த்தாலும் உங்களை அந்த நிகழ்ச்சி சிரிக்க வைப்பதுதான் இதனுடைய சிறப்பு மேலும் ஒரு நல்ல தீர்வும் கூட. ஒரு நல்ல சிரிப்பு உங்களை உற்சாகபடுத்துவதோடு உங்கள் இதயத்திற்கும் நல்லது என்று கூறுகின்றனர்.

அவ்வப்போது வெளியில் சென்று வாருங்கள்:
உங்களுக்கு ஏற்ற மாதிரியான, நீங்கள் விரும்பும் படியான பகுதிகள் வெளிப்புறத்தில் மும்பையில் இல்லை என்றாலும், வெளியில் சென்றுதான் பாருங்களேன், வெளியில் என்ன என்ன உள்ளாது என்று. வெளியில் கொஞ்ச நேரம் சென்று பாருங்கள், அது உங்களுக்கு என்ன மாற்றத்தை தருகிறது என்று. நீங்கள் ஒரு தோட்டத்திற்கு அருகில் சென்று நெருக்கமாக சிறிது நேரம் உட்கார்ந்து பாருங்கள், இதனால் உங்கள் உடல் மன அழுத்தம் குறைவதோடு, போதுமான வைட்டமின் டி யும் உங்கள் உடம்பிற்கு கிடைக்கிறது. எனவே நீங்கள் தினமும் சுமார் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க‌ வேண்டும்.

உடற்பயிற்சி:
தினமும் நீங்கள் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதால், மூளையில் ஒரு இரசாயனக்கலவையானது சுரக்கிறது. இந்த இரசாயனம் “நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறப்படுகிராது மேலும் இதை எண்டோர்பின் எனப்படும் இரசாயனம் என்றும் கூறுவர்.

உங்களுக்கான‌ மசாஜ் செய்ய நேரம் ஒதுக்குங்க‌ள்:
ஒரு நீண்ட நேர மசாஜை விட வேறு எதுவும் உங்களை ஓய்வாகவும், நிம்மதியாகவும், புத்துணார்ச்சியோடும் வைத்திருப்பதில்லை. நீங்கள் ஒரு முழு உடல் மசாஜ் அல்லது ஒரு தலை அல்லது கால் மசாஜ் எதை செய்தலும் சரி, ஒரு தூய்மையான, மிகவும் அவசரப்படாத ஒரு நல்ல இடமாக சேர்வு செய்து அங்கு போய் மசாஜ் செய்து கொள்வது நல்லது.

வீட்டில் நறுமண எண்ணெய்கள் பயன்படுத்தவும்:
இந்த எண்ணெய்கள் நீங்கள் ஓய்வெடுக்க மட்டும் உதவுவதில்லை உங்களை சந்தோஷமாகவும் வைத்து இருக்க உதவுகிறது. ஒரு மல்லிகை நறுமண எண்ணெய் அல்லது தோட்ட செடி வகை (ஜெரேனியம்) போன்ற நறுமண எண்ணெய்களை வீட்டை சுற்றிலும் சில துளிகள் தெளிக்கவும் அல்லது நறுமணம் பரப்பும் டிஃப்யூசரை பயன்ப‌டுத்தவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button