32.1 C
Chennai
Sunday, May 11, 2025
201608230813193782 how to make Black cumin seeds rice SECVPF
ஆரோக்கிய உணவு

அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்

கருஞ்சீரகம் அஜீரணத்தை போக்கும். வயிற்றுவலியை குணமாக்கும். உடல் சூட்டை அதிகரித்து இதமாக்கும்.

அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்
தேவையான பொருட்கள் :

கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 5 பற்கள்
மிளகு – 10 (தூளாக்கிக் கொள்ளவும்)
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
பச்சரிசி – 200 கிராம்(வேகவைத்துக் கொள்ளவும்)

செய்முறை :

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் நெய் ஊற்றி, கடுகை தாளிக்கவும். பின்பு அதில் கருஞ்சீரகத்தை கொட்டி வறுத்துவிட்டு, வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் பூண்டை கலந்து கொள்ளவும்.

* அடுத்து அதில் மிளகு தூள், வடித்து வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறி சுவைக்கவும்.

குறிப்பு :

* இதற்கு தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும். சளி, இருமல், உடல்வலி இருக்கும்போது இதை தயார் செய்து சாப்பிடலாம். குளிர் காலத்திற்கும் ஏற்ற உணவு.

* பெண்கள் மாதவிடாய் காலங்களில் இதை தயாரித்து சுவைக்கலாம். அஜீரணத்தை போக்கும். வயிற்றுவலியை குணமாக்கும். உடல் சூட்டை அதிகரித்து இதமாக்கும். 201608230813193782 how to make Black cumin seeds rice SECVPF

Related posts

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க…

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan

கேரட் துவையல்- 10 நிமிடத்தில் ருசியாக செய்வது எப்படி?

nathan

ஏன் தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் உங்கள குடிக்க சொல்லுறாங்க தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா நீங்கள் போதுமான அளவு காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தயிரை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் உணவுகள்!

nathan

பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

சர்க்கரை நோயை உடனே விரட்ட வேண்டுமா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan