தலைமுடி சிகிச்சை

வம்சமும், தலை முடியும்

முடிகளின் அடர்த்தி எவ்வளவு என்பதையெல்லாம் நம்மால் தீர்மானிக்க முடியாது நமது வம்சம்தான் தீர்மானிக்கும்.

வம்சமும், தலை முடியும்
மனிதனின் தலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை தலைமுடிகள் இருக்கின்றன. அவை ஒரு மாதத்துக்குள் 1¼ சென்டி மீட்டர் நீளம் வளர்கின்றன. எல்லா தலைமுடியும் ‘பாலிக்கில்ஸ்’ என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. இவை அனைத்துமே செல்கள்தான்.

இந்த ‘பாலிக்கில்ஸ்’ பை மேல் தோலில் இருந்து கீழ் தோலை துளைத்து இருக்கும். ஒரு மனிதனுக்கு இந்த பைகள் எத்தனை இருக்க வேண்டும், அதில் இருக்கும் முடிகளின் அடர்த்தி எவ்வளவு என்பதையெல்லாம் நம்மால் தீர்மானிக்க முடியாது. நமது வம்சம்தான் தீர்மானிக்கும். வம்ச வகை என்பது நமது மரபணுக்களில் உள்ளது. ரோமப்பைகள் என்பது ஒரு குழந்தை கருவாக உருவான 2-வது மாதத்தில் இருந்து 5-வது மாதத்துக்குள் தீர்மானமாகி அமைந்து விடுகின்றன.

தலைமுடியுடன் நிறமும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்கள் தலை முடிக்கு உண்டு. முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். மெலனின்தான் முடியை கருப்பாக்குகிறது. வயது ஆக, ஆக மெலனின் சுரப்பது குறைகிறது. அதனால் தலைமுடியின் உண்மை நிறமான வெள்ளை வெளியே தெரிகிறது.

ஒவ்வொரு தலைமுடிக்கும் தனிப்பட்ட வாழ்நாள் இருக்கிறது. அதனால் தான் தினமும் முடி உதிர்கிறது. ஒரு நாளைக்கு 40 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண நிகழ்வு. அதே வேளையில் சில ரோமங்கள் அதற்கு இணையாக புதிதாக முளைப்பதால் ரோம அடர்த்தி எப்போதும் நமக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது.

முடி வளரும் வேகமும் ஆளுக்கு ஆள் மாறுகிறது. அவ்வளவு ஏன், ஒரு மனிதனின் உடலிலேயே கூட ஒவ்வொரு இடத்திலும் ரோமங்களின் வளர்ச்சி ஒவ்வொரு விதமாக இருக்கிறது. முடி இழப்பு என்பது பெரும்பாலும் ஆண்களின் பிரச்சினைதான். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னும், மெனோபாஸூக்கு பிறகும் முடி உதிரும்.

கர்ப்பமாக இருக்கும் போது முடி மிக அடர்த்தியாக வளரும். குழந்தைப் பிறந்த பின் வாரத்துக்கு ஆயிரம் என்ற கணக்கில் முடி கொட்டும். வழுக்கை என்பது பரம்பரை சமாச்சாரம்தான். ஆண் தன்மையை அதிகப்படுத்தும் ‘ஆண்ட்ரோஜன்’ ஹார்மோன் சுரப்பு அதிகம் இருந்தாலும் முடி உதிரும். அதனால் வழுக்கை தலையர்கள் காதலில் கில்லாடியாக இருப்பார்கள் என்பது ஓரளவிற்கு உண்மையே! 201609030838278990 Families hair problems SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button