மருத்துவ குறிப்பு

ஆண்களிடம் பழகும் பெண்கள் – உஷார்!

ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப்பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள்.
நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.
எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள
வேண்டும். அதைப் பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள முடியும்.

அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது. இரவில் தனியாக செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை இப்போது பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை. தினமும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்த வண்ணம் தான் உள்ளது. தினம் தினம் பாலியல் பலாத்காரம், ஈவ்டீசிங்,
வன்கொடுமை, கொலை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதற்கு முக்கியகாரணம் போதிய பாதுகாப்பு இன்மை மற்றும் கடுமையான தண்டனை இல்லாததுமே ஆகும். பெண்கள் தனியாக போகும் போது ஏதாவது
பிரச்னை வந்தால் பெண்கள் தங்களை காத்துக் கொள்ள முன்னொச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் அவசர போலீஸ் நம்பரை வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது பிரச்னை வந்தால் உடனே போலீசை தொடர்பு கொள்ளுங்கள். இரவில் நீங்கள் தனியாக வரும் போது யாராவது உங்களை துரத்தினால் ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ,கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள்.

அப்படி இல்லை என்றால் ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள். அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பார்கள்.மேலும் அங்கு கேமராவும் இருக்கும்.
அதனால் யாரும் உங்களை எதுவும் செய்ய இயலாது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை யாரேனும் தாக்க நேர்ந்தால் உடனடியாக சமையல் அறைக்குள் சென்று விடுங்கள். உங் களுக்கு மட்டும் தான் மஞ்சள்,மிளகாய் பொடி எல்லாம் எங்கு இருக்கும் என்று தெரியும். மேலும் கத்தி,தட்டுகள் கூட ஆபத்தான
ஆயுதங்களாக மாறலாம். எந்த பாதுகாப்பும் இல்லாத சமயத்தில் இவற்றை அவன் மேல் விட்டெறியுங்கள். கூச்சலிடுவது, ஆபத்தான நேரங்களில் ஆசாமிகளுக்கு மிக பெரிய எதிரி.

வேலை செய்யும் இடத்தில் சரியான புரிதல் முக்கியம் உங்கள் நெருங்கிய உறவோ, உங்கள் அலுவலோ, உங்கள் வியாபாரமோ, இல்லை உலகமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாழ்க்கையை முடிவு செய்பவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால், எல்லா மனிதர்களையும், எல்லா பொருட்களையும் உங்கள் புரிதலுக்குள் உட்படுத்திக்கொள்ளுங்கள். மக்களின் மடத்தனத்தையும் தாண்டிய தாய் உங்கள் புரிதல் மலர வேண்டும். உங்களைச் சுற்றி மிக அற்புதமான பல மனிதர்கள் இருக்கிறார்கள், ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர்கள் கொஞ்சம் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

அவர்களைப் புரிந்து கொள்ளாத பட்சத்தில், நீங்கள் இழப்பது அவர்களைத்தான். அவர்களது கோபங்களையும், அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளாத பட்சத்தில் நீங்கள் நிச்சயமாக அவர்களை இழப்பீர்கள். ஆனால் அவர்களை புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை எப்படி கையாள்வது என்பதையும் புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை ஒரு நேர் கோடல்ல. வாழ்க்கை முறைப்படி நடப்பதற்கு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய வேண்டி வரும். உங்கள் புரிந்து கொள்ளும் திறனை கோட்டை விட்டால், உங்களை திறமையையும் அதனுடன் சேர்த்தே இழந்து விடுவீர்கள். தனிப்பட்ட உறவுகள் ஆகட்டும் அல்லது வேலைசூழ்நிலையில் நிலவும் மேலாண்மை ஆகட்டும் இரு இடங்களிலும் உங்களது தேவை – புரிதல். புரிதல் இல்லாத பட்சத்தில் கனிவு தரும் சுகமான உறவுகள் மலராது. 1tuWMFb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button