அசைவ வகைகள்

மிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி

எளிய முறையில் சுவையான மிளகு சிக்கன் டிக்கா எப்படி செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.

மிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
மிளகு தூள் – 5 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
தயிர் – 200 மிலி
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை :

* சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவிய பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

* பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, பச்சை மிளகாய் விழுது, பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேகவைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விடவேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட வேண்டும்.

* லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவையில்லை.

* சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும்.

* சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியிலும் டீப் ப்ரை செய்யலாம்.201609061001315569 how to make chicken pepper tikka SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button