சிற்றுண்டி வகைகள்

தக்காளி – கார்ன் புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கப்,
வேகவைத்த கார்ன் – அரை கப்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – 3,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
• கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கவும்.
• தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
• பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
• அரிசியை நன்றாக கழுவி பின் தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
• குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்து. வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
• வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
• பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.
• இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை சிறிதாக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
• வேக வைத்த கார்னை மேலே தூவி. பரிமாறவும்.tha

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button