ஆரோக்கிய உணவு

நிறை உணவு என்றால் என்ன?

  • எமது அன்றாட உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ச்சத்துக்கள், விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கியுள்ளன. இவற்றை சரியான அளவுகளிலும் நல்ல தரமானதுமாக உணன்பதே ஆரோக்கியமான உணவுப்பழக்கமாகும்.
  • உதாரணமாக எமது உணவில் மாப்பொருள் 50-55% மும் புரதம் 15-20% மும் கொழுப்பு 30% மும் இருக்க வேண்டும். அத்துடன் நார்ச்சத்துக்கள் விற்ற மின்கள் மற்றும் கணிப்புக்கள் என்பனவும் தேவையான அளவுகளில் அன்றாடம் உள்ளடக்கப்பட வேண்டும்.
  • மாப்பொருளானது எளிய வெல்லங்களாக இல்லாமல் (உதாரணம் குளுக்கோஸ்) சிக்கலான சேர்வைகளாக இருக்க வேண்டும். எனவே தவிடு நீக்காத புழுங்கல் அரிசி, தவிட்டுப்பாணன், தவிடு நீக்காத அரிசிமா, குரக்கன் மா, ஆட்டாமா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உணவே சிறந்ததாகும்.
  • குளுக்கோஸ், தேன், பழப்பாகு (jam), அதிகம் இனிப்புள்ள உணவுகள் மற்றும் சொக்லட் போன்ற மாப் பொருள் அதிகமுள்ள உணவு வகைகளை இயன்றவரை குறைத்துக் கொள்வது நல்லது. (முற்றாக உணவிலிருந்து நீக்கத் தேவையில்லை)

  • முட்டை வெண்கரு, மீன், அவரை,சோயா, பருப்பு, நெத்தலிக் கருவாடு, இறைச்சி வகைகள், கொழுப்பு நீக்கிய பால் என்பன அதிகளவில் புரதச்சத்து நிறைந்த உணவாகும்.
  • இவ்வாறான உணவுகளை உடற்பருமன் குறைந்த வர்கள் அதிகமான அளவில் உட்கொள்ளலாம். மற்றவர்கள் புரதமானது உணவில் 0.8g/kg உடல்நிறைக்கு என்னும் அளவில் நாளாந்தம் உட்கொள்வது சிறந்தது.

  • கட்டமைப்பின் அடிப்படையில் கொழுப்பானது நிரம்பல் அடைந்த கொழுப்பு (saturated fat) நிரம் பலடையாத கொழுப்பு (unsaturated fat) என இரு வகைகளில் காணப்படுகின்றது.
  • நிரம் பலடையாத கொழுப்பே உடலுக்கு உகந்ததாகும். சோயாஅவரை நல்லெண்ணெய் கடல் மீன்களில் காணப்படும் கொழுப்பு ஒலிவ் எண்ணெய், சூரியகாந்திஎணணெய், சோயா எண்ணெய், கோர்ண் எண்ணெய் போன்றவை நிரம்பலடையாத கொழுப்பை கொண்டிருப்பதால் அவை உடலுக்கு நன்மை தரும்.
  • ஆனால் நண்டு, கணவாய், மிருக இறைச்சி வகைகள், பட்டர் (butter), சீஸ் (cheese), நெய் போன்ற உணவுகளில் கொலஸ்ரோல் அதிகளவில் காணப் படுவதால் இவ்வுணவுகளை குறைத்து கொள்வது உசிதமாகும். இறைச்சி வகைகளில் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியானது கொலஸ்ரோல் குறைந்த உணவாகும்.
  • பச்சை இலை வகைகள், மரக்கறிகள் மற்றும் பழங்களில் விற்றமின்களும், கனியுப்புக்களும், நார்ச்சத்தும் அடங்கியிருப்பதால் இவ் உணவுகள் தினமும் அதிகளவில் உண்ணப்படலாம். பழச்சாற்றை விட முழுமையான பழங்களே சிறந்ததாகும்.
  • இவ் உணவுகளில் காணப்படும் நார்ச்சத்தானது ஒருவரின் உடலிலுள்ள குளுக்கோசின் அளவு கொலஸ்ரோல் போன்றவற்றை கட்டுப் படுத்துவதுடன் மலச்சிக்கலையும் குறைக்க உதவும்.
    நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளாவன: வாழைப்பழம், அன்னாசி, மாம்பழம், விளாம் பழம், மாதுளம்பழம், சோளன் பருப்பு, கெளபி, தினை அவரைக்காய் மற்றும் எல்லாவித மான மரக்கறிகள்.

  • பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவை அதிகளவில் கொலஸ் ரோல் நிறைந்த உணவுகளாகும்.
  • உணவில் உட்பின் அளவையும் இயன்ற வரை குறைப்பது நல்லது. சமையலுக்கு தேவை யான உப்பையும் குறைந்தளவில் பாவிப்பது நல்லது. அத்துடன் உணவின் போது மேல திகமாக உப்பு சேர்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • ஊறுகாய் சிப்ஸ் (chips)மிக்சர், பக்கற்றில் அடைக்கப்பட்ட உணவுகள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் என்பன அதி களவில் உப்பை கொண்டுள்ளன.
    அதிகளவாக உப்பை உணவில் சேர்க்கும் போது உயர் குருதி அமுக்கம், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் என்பன ஏற்படக் கூடும்.

  • சர்வதேச அளவில் உணவுக் கூம்பக முறையானது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உணவுக் கூம்பகத்தில் நாம் உண்னும் உணவில் அடங்கியிருக்க வேண்டிய உணவுகளும் அவை எந்த அளவில் எடுக்கப்பட வேண் டும் என்பவை பற்றிய விபரங்களும் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது.
  • photo

  •  இலகுவில் கூறுமிடத்து ஒரு வேளை உணன்னும் உணவின்போது உணவுத்தட்டில் கால் வாசி சோறும், கால் வாசி மரக்கறியும், கால்வாசியில் புரதம்நிறைந்த உணவும், மீதிக் கால்வாசியில் பழங்களும் அடங்கியிருக்க வேண்டும்.
  • உணவு அருந்திய பின் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவர் மரக்கறிகளை மட்டும் உட்கொள்பவராயின் உணவின் பின் பால் அல்லது தயிர் போன்றவற்றை உட்கொள்வது அவசியமாகும்.
    Dr.P.மயூரதன்

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button