சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கேழ்வரகு – புதினா அடை

கேழ்வரகில் அதிகளவு சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.

சுவையான சத்தான கேழ்வரகு – புதினா அடை
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்,
இஞ்சி – சிறிதளவு,
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 2 துண்டுகள் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
காய்ந்த மிளகாய் – 4,
புதினா – ஒரு கைப்பிடி,
வெங்காயம் – 1
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், இஞ்சி, தேங்காய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், புதினாவை போட்டு சிறிது நேரம் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.

* கேழ்வரகை கல் நீக்கி அரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊறவைத்த கேழ்வரகு, அரிசியை மிக்சியில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, தேங்காய், இஞ்சி, உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான கேழ்வரகு – அரிசி அடை ரெடி.

* உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற அடை இது.201609091114544465 Tasty nutritious ragi mint adai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button