31.1 C
Chennai
Monday, May 20, 2024
201609090831481807 how to make egg biryani SECVPF
அசைவ வகைகள்

முட்டை பிரியாணி செய்வது எப்படி

முட்டை பிரியாணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முட்டை பிரியாணி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – அரை கிலோ,
முட்டை – 10,
தக்காளி – 4,
பெரிய வெங்காயம் – 3,
கடைந்த தயிர் – 1 கப்,
எண்ணெய் – அரை கப்,
நெய் – கால் கப்,
உப்பு – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 4 டீஸ்பூன்.

அரைக்க :

பட்டை – 2,
லவங்கம் – 2,
ஏலக்காய் – 6,
பச்சை மிளகாய் – 5,
புதினா – ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

செய்முறை :

* அரிசியைக் கழுவி ஊறவிடவும்.

* அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த மசாலா, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள வதக்கி எண்ணெய் ஓரங்களில் வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு கொதிக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.

* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு இறக்கவும்.

* சுவையான முட்டை பிரியாணி ரெடி.201609090831481807 how to make egg biryani SECVPF

Related posts

இந்த முறையில் மட்டன் குழம்பு வைத்து பாருங்கள் சுவை அப்படி இருக்கும்….

nathan

இறால் மசால்

nathan

மீன் குழம்பு

nathan

மட்டன் சுக்கா வறுவல்

nathan

கிராமத்து கருவாட்டுக் குழம்பு

nathan

நண்டு குழம்பு

nathan

முட்டை அவியல்

nathan

சிக்கன் குழம்பு: பேச்சுலர் ஸ்பெஷல்

nathan

கேரளா சிக்கன் ப்ரை

nathan