30.8 C
Chennai
Monday, May 12, 2025
sl3811
சிற்றுண்டி வகைகள்

சிதம்பரம் கொத்சு

என்னென்ன தேவை?

பிஞ்சான வயலட் கத்தரிக்காய் – 1/4 கிலோ,
புளிக்கரைசல் – 1/2 கப்,
நல்லெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்,
ஊற வைத்து வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை – 6 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை,
தக்காளி – 2,
கறிவேப்பிலை – 1 கொத்து,
வெல்லம் – சிறு துண்டு.

வறுத்துப் பொடிக்க…

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்,
வரமிளகாய் – 5,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
தேங்காய்த்துருவல் – 4 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள எண்ணெயை விட்டு கடுகு தாளித்து நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காயை போட்டு வதக்கவும். பிறகு தக்காளியை வதக்கி, புளிக்கரைசலை அதில் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். பாதிக்கு மேல் வெந்ததும் வேக வைத்த கொண்டைக் கடலையைச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும், பொடித்த பொடியினைத் தூவி மேலும் ஓரிரு கொதி வந்ததும் வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சாம்பார் வெங்காயத்திற்கு பதில் தக்காளி, கொண்டைக்கடலை சேர்க்கப்பட்டுள்ளது.sl3811

Related posts

ஒக்காரை

nathan

ரமழான் ஸ்பேஷல்: நோன்பு கஞ்சி செய்முறை…

nathan

பிரட் பஜ்ஜி

nathan

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

nathan

இடியாப்பம் சௌமீன்

nathan

கேரட் கொத்து சப்பாத்தி

nathan

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை

nathan

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

nathan

சுவையான பிரட் வடை தயார்

nathan