உடல் பயிற்சி

இடுப்பு, குதிகால் மற்றும் கணுக்கால் பகுதிகளை வலுவாக்கும் ஸ்கிப்பிங்

ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங்கைவிட அற்புதமான விளையாட்டு ஸ்கிப்பிங். விளையாட்டு மட்டுமல்ல; சிறந்த உடற்பயிற்சியும்கூட. அந்தக் காலத்தில் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகச் செய்ததை, இன்றைக்கு உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தும்கூட பலரும் செய்யத் தயங்குகின்றனர். ஸ்கிப்பிங் விளையாடுவதற்கான ஆர்வமும் குறைந்துகொண்டே போகிறது.

ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தால், 1,300 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஸ்கிப்பிங் செய்வதால், நம் உடலில் உள்ள தசை, எலும்புப் பகுதிகள், கை கால்கள் என முழு உடலுமே வேலை செய்கிறது. இதனால், நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டுபோகும் ஒரு செயலாக ஸ்கிப்பிங் பயன்படுகிறது. ஸ்கிப்பிங் பயிற்சியின்போது நாம் குதிப்பதால், இடுப்புப் பகுதி வலுவடைகிறது.

தொப்பை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது. உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையும் அதிகரிக்கிறது. இதயத்துக்கு மிகவும் ஏற்ற பயிற்சி. ஸ்கிப்பிங் செய்யும்போது, 70 சதவிகித உடலின் கீழ்ப் பகுதிகளும், 30 சதவிகிதம் இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளும் வேலை செய்கின்றன. கால், குதிகால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலுவடைகின்றன.

ஸ்கிப்பிங் பண்ணும்போது ரெண்டு கையையும் சுழற்றுவதால், கைகளில் உள்ள தசைப்பகுதிகள், மணிக்கட்டு போன்றவை வலிமை பெறும். ஜாகிங், உடற்பயிற்சி செய்யும்போது கழுத்துவலி, மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஸ்கிப்பிங் செய்யும்போது இதுபோன்ற வலிகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. 10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது, 30 நிமிடம் ஜாகிங் செய்வதற்குச் சமம். ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால், உடலை ஃபிட்-ஆக வைத்துக்கொள்ள முடியும்.

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்ததும் 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஜாகிங்கைவிட ஸ்கிப்பிங்கில் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது. குழந்தைகள் நன்கு உயரமாக வளரவும் இந்தப் பயிற்சி உதவுகிறது. பெரியவர்கள், மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்னை உள்ளவர்கள், கயறைத் தாண்டிக் குதிக்க முடியாது என்பதால், அவர்கள் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

கர்ப்பிணிகள் செய்யவே கூடாது. வயதான பெண்கள் மற்றும் தொப்பையுள்ள பெண்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது கவனம் தேவை. பெண்கள் தாண்டிக் குதிக்கும்போது, கர்ப்பப்பை கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தாலும்கூட மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.51937f62 5533 4ec7 8147 9e64c3618011 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button