ஆரோக்கிய உணவு

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கிராமப்புறத்தில் பின்பற்றப்படும் ஓர் வைத்தியம் தான் சூடாக ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது. இதனால் இந்த காபியில் உள்ள மருத்துவ குணங்களின் மூலம், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, புத்துணர்ச்சியைப் பெற முடியும்.

சரி, இப்போது அந்த கருப்பட்டி காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து குடித்து, உங்கள் உடம்பைத் தேற்றிக் கொள்ளுங்கள். சொல்லப்போனால் இதனை மழைக்காலத்தில் தினமும் செய்து குடித்து வந்தால், நோய்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

தேவையான பொருட்கள்: தண்ணீர் – 1 கப் சுக்கு பொடி – 1 டீஸ்பூன் கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்

சுக்கு பொடிக்கு… உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப் மல்லி – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!

karupatti coffee 12 1449916992

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button