சைவம்

காலிபிளவர் மிளகு வறுவல்

தேவையான பொருள்கள்
காலிபிளவர் – 1
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிது
தாளிக்க
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
* காலிபிளவரை சிறிய பூக்களாக வெட்டி சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும்.
* வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் காலிபிளவருடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரும் சேர்த்து காலிபிளவர் வேகும் வரை நன்கு கிளறி விடவும்.
* காலிபிளவர் வெந்ததும் மிளகாய் தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு நன்கு கிளறவும்.
* இறுதியில் கொத்தமல்லித்தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
* சுவையான காலிபிளவர் மிளகு வறுவல் ரெடி.12347970 1108534695832688 2964158940087378121 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button