சிற்றுண்டி வகைகள்

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி

கம்பு, பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது கம்பு, பாலக்கீரையை சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 200 கிராம்,
உப்பு – தேவைக்கு,
கரகரப்பாக திரித்த மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
பாலக்கீரை – 1 கப்,
பச்சைமிளகாய் – 1,
வெங்காயம் – 1,
நெய் – 1 டீஸ்பூன்,
தண்ணீர் – 1/4 கப் + தேவைக்கு,

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு மாவை லேசாக வறுத்து, அதில் மிளகுத்தூள், பாலக்கீரை, ப.மிளகாய், வெங்காயம், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

* பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரித்து, ஒரு தட்டில் ஈரத்துணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரொட்டியை போட்டு சிறிது வெண்ணெய் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இருபுறமும் நன்கு சிவக்க வேகவைத்து எடுக்கவும்.

* நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.

* சுவையான கம்பு பாலக் கீரை ரொட்டி ரெடி.

குறிப்பு: சரியான பதம் வரவில்லை என்றால் அதில் சிறிது ரவை அல்லது அரிசி மாவு கலந்து கொள்ளலாம்.201609171100547764 Bajra Palak Paratha SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button