தலைமுடி சிகிச்சை

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ்

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ்

வறண்ட கூந்தல் பட்டுப் போன்று பளபளக்கப் பத்து டிப்ஸ்…

கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். உங்களின் கூந்தலல் வறண்ட தன்மையுடையதா? இதோ, உங்கள் கூந்தல் பட்டு போன்று மிளிர ‘விசிபிள் டிஃபரன்ஸ்’ பார்லரின் உரிமையாளர் வசுந்தரா தரும் டிப்ஸ்கள்…

1. வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும்.
2. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி ‘ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்’ உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி..
3.வறட்சியால் முடி வலுவில்லாமல் மிகவும் `தின்’னாக காணப்பட்டால், ஒரு வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் பச்சரிசி மாவு, ஒரு டீஸ்பூன் ஹென்னா, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தொடர்ந்து தலை மற்றும் கூந்தலில் தேய்த்துக் குளித்து வர… கூந்தலின் வலு கூடும்.

p100a

4.. ஆல்மண்ட் ஆயில்,ஆலிவ் ஆயில்,,நல்லெண்ணெய்,விளக்கெண்ணையை சமஅளவு எடுத்து,லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கலாம். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து குளிக்க உங்கள் கூந்தல் ‘டால்’ அடிப்பது உறுதி.
5. பாலேடு நீக்காத ஒரு டம்ளர் பாலில், ஒரு முட்டையை நுரை வரும்வரை நன்கு அடித்து, அதனை தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து அலச, கூந்தல் மிருதுவாகும். வாரம் இருமுறை இதைத் தொடர்ந்து செய்து வர, நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
6.ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, நல்லெண்ணையில் ஊறவைக்கவும். 2 அல்லது 3 நாட்கள் கழித்து நன்கு ஊறிய பின் இலைகளை வடிகட்டிவிட்டு, அந்த எண்ணெய்யை கேசத்துக்குத் தைலமாகப் பயன்படுத்தி வர, முடிக்கொட்டுதல் பிரச்னை குணமாவதுடன் வறட்சித்தன்மையும் குணமாகும்
7. தலைமுடியில் இயற்கையாகவே எண்ணெய்த்தன்மை இருக்கும் என்பதால் தினமும் காலை ஒருமுறை மாலை ஒருமுறை தலையை பெரிய பற்கள் கொண்ட சீப்பால் வாரினாலே முடி பளபளப்பாக தெரியும்.
8.மூடி அதிக வறட்சித்தன்மை உடையவர்கள் தேங்காய்ப்பாலை ஸ்கால்ப்பில் படாமல் மூடியில் மட்டும் தேய்த்து,ஒரு மணிநேரம் ஊறவைத்து பின் அலச கூந்தல் வறட்சித்தன்மை குறையும்.

9.முகத்தில் எண்ணெய் வடிதல் பிசுசுப்பிசுப்பதன்மை காரணமாக, சிலருக்கு எண்னெய் தேய்த்துக்கொள்ள பிடிக்காது, எனவே மெடிக்கல்களில் கிடைக்கும் ஹெர்பல் சீரத்தை, ஸ்கால்ப்-இல் படாமல் முடிகளில் மட்டும் தேய்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்வதால் எண்ணெய் இன்றி, தலை வறண்டு போவதைத் தடுக்க முடியும்.அதே நேரம் தலைக்கு நீங்கள் எண்ணெய் தேய்த்திருப்பது போன்றும் தோற்றம் அளிக்காது.
10. புரதச்சத்து நிறைந்த சோயா, பனீர், உலர் பழங்கள், கடலை, பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க நல்ல பலன் தெரியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button