மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை

சிறுநீர் கழிப்பதை பொறுத்தவரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கீழே பார்க்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக்குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப்பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.

ஆண் பெண் இருபாலரின் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவப் பிரிவுக்கு ‘யுராலஜி (Urology) என்று பெயர். மகளிர் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பிரிவுக்கு ‘கைனகாலஜி’ (Gynaecology) என்று பெயர்.
மகளிர் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் சிகிச்சை அளிக்க ‘யுரோகைனகாலஜி’ (Urogynaecology) என்ற சிறப்பு மருத்துவப் பிரிவு உள்ளது.

இவ்வாறு மகளிர் சிறுநீரியல் மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள டாக்டருக்கு ‘யுரோகைனகாலஜிஸ்ட்’ (Urogynaecoligist) என்று பெயர்.

ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.

இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாத வகைக்கு ஏற்ப அதைத் தீர்க்க நல்ல மாத்திரைகள் உள்ளன. பிரச்சினைக்கு ஏற்ப மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தற்போது நவீன சிகிச்சை முறை உள்ளது. டிவிடி (Tension Free Vaginal Tape) என்ற இந்த நவீன சிகிச்சை முறையில் டேப்பைக் கொண்டு பாதிப்புக்கு வலுப்படுத்தப்படும். இந்த நவீன எளிய சிகிச்சையை காலையில் செய்து கொண்டு மாலையில் வீடு திரும்பி விடலாம். இச்சிகிச்சை, லாப்ராஸ்கோப்பி சிகிச்சையைக் காட்டிலும் எளிமையானதும் சிறந்த பலனை அளிக்கக்கூடியதும் ஆகும்.201609191151495293 urinary problems in women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button