சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

மாலை வேளையில் டீ, காபியுடன் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்.

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா
தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – பெரிய பூ 1
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி சூடு நீரில் சிறிது உப்பு போட்டு அதில் காலிஃப்ளவரை போட்டு 15 நிமிடம் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், அதில் காலிஃப்ளவரைப் மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி!!!201609190903029095 Evening Snacks Cauliflower pakoda SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button