ஆரோக்கிய உணவு

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப்பிடப்படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.

ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

* ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை உணவை சாப்பிடுங்கள்.

* ஆற, அமர உட்கார்ந்து சாப்பிடுங்கள். மென்று விழுங்குகள். நொறுங்கத் தின்றால் நூறு வயது.

* மிக வேகமாகவோ, ரெம்பவும் மெதுவாகவோ சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது பேசுவதும் நல்லதில்லை.

* கோபம், மனவருத்தம், தன்னிரக்கம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

* பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

* சாப்பிட்டதும் படுக்காதீர்கள். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் நல்லது.

* எப்போதும் உணவை வீணாக்காதீர்கள்.

* காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக ஒரு போதும் நறுக்கக்கூடாது. சிறிதாக நறுக்கும் போது, அவைகளில் இருக்கும் சாறு வெளியேறி சத்துக்கள் குறையும்.

* சமையலுக்கு தரமான எண்ணெயை பயன்படுத்தவேண்டும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்குவதற்கு பதில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு, அதன் பின்பு எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், எண்ணெயில் இருந்து வெளியேறும் ரசாயனத்தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.

* எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து ஒன்றாக எந்த உணவும் தயாரித்து சாப்பிடக்கூடாது. பாலும், எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து போகும். ஏத்தன் பழமும் (நேந்திரன்) பாலும் சேர்த்து சாப்பிட்டால், சளித்தொல்லை அதிகரிக்கும்.

* நெய் சேர்க்கும் உணவில் சிலர், தனிச்சுவை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு எண்ணெயும் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

* பாகற்காய், வெந்தயம் போன்றவைகளில் இருக்கும் கசப்பு தன்மையை போக்க எந்த பொருளையும் அதனுடன் சேர்க்காதீர்கள். ஏன் என்றால் அவை இரண்டின் மூலமும் உடலுக்கு தேவையானதே கசப்புதான். அந்த கசப்பை நீக்கிவிட்டு அவைகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லை.

* முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.

* காய்கறிகளை ஒரு போதும் அதிகமான அளவு எண்ணெய் சேர்த்து வறுக்கக்கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் வைட்டமின், தாதுச்சத்துகளை போக்கிவிடும்.

தினமும் ஒவ்வொரு நேரமும் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா?

* காலையில் பாதி வயிற்றுக்கு உணவும் அதாவது 50 சதவீதம், மதிய உணவு 30 சதவீதம், நான்கு மணிக்கு 10 சதவீதம், இரவில் 20 சதவீதம் என்ற அளவிற்கு உணவு உண்ணவேண்டும்.

* ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்க்கப்படவேண்டும். இதிலிருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.

* மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் 7-8 மணிநேரம் இடைவெளி இருந்தால் மாலை நேரத்தில் எலுமிச்சை சாறு, பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.201609201155026326 How to eat healthy food SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button