பழரச வகைகள்

சுவையான சத்தான பாதாம் பால்

பாதாம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. காலையில் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பாதாம் பாலை செய்து கொடுக்கலாம்.

சுவையான சத்தான பாதாம் பால்
தேவையான பொருட்கள் :

பாதாம் – 6
காய்ச்சிய பால் – 100 மில்லி
தேன் – 3 டீஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

* பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்.

* குங்குமப் பூவைச் சிறிதளவுத் தண்ணீரில் ஊற வைக்கவும். அப்போதுதான் பாதாம் பாலின் வண்ணம் (லைட் மஞ்சள்) கிடைக்கும்.
* குங்குமப்பூவுடன் ஊற வைத்த பாதாம் பருப்பு, பால், தேன் சேர்த்து, மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

* சுவையான நுரையுடன் கூடிய பாதாம் பால் தயார்.

குறிப்பு:

பாதாம் பாலை, அடுப்பில் சுண்ட வைத்தும் குடிக்கலாம்.201609290715455875 Tasty nutritious almond milk SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button