மருத்துவ குறிப்பு

கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பத்த கோணாசனம்

பெண்களின் கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை பத்த கோணாசனம் சீராக்கும்.

கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பத்த கோணாசனம்
பத்த கோணாசணம் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க காரணமாகின்றன. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். நீர்ப்பைகள் கருப்பையில் உருவாவதை தடுக்கச் செய்யும்.

செய்முறை :

முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள். இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.. அந்த நிலையில் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.

பலன்கள் :

மன அழுத்தம், தேவையில்லாத குழப்பங்கள், கருப்பை நீர்கர்ட்டி ஆகியவைகள் வராமல் தடுக்கும். அது போலவே முறையற்ற மாதவிலக்கு சீராகும். முடிஉதிர்தல், முகப்பரு, உடல் பருமன் ஆகியவைகளும் சீராகும். தினமும் இரு வேளைகள் செய்யுங்கள்.uterus menstrual problems adjusting baddha konasana

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button