க்வில்டு வால் ஆர்ட்

​தேவையானவ-

  • கார்டு ஸ்டாக் பேப்பர் – விரும்பிய நிறங்கள்
  • க்வில்லிங் டூல்
  • க்வில்லிங் கோம்ப்(Quilling Comb)
  • க்ளு

 

செய்முறை-

 

C0417_01

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளவும்.

 

கார்டு ஸ்டாக் பேப்பரை கால் அங்குல அளவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் உபயோகித்துள்ளேன். 2 பச்சை ஸ்ட்ரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டவும். 2 மஞ்சள் நிற ஸ்ட்ரிப்புகளையும் அதேபோல் ஒட்டவும். ஒட்டிய பச்சை நிற ஸ்ட்ரிப்பையும், மஞ்சள் ஸ்ட்ரிப்பையும் பாதியாக மடித்து படத்தில் உள்ளது போல் வைத்து ஒட்டவும்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இலை மற்றும் கொடி போல் செய்து ஒட்டிக் கொள்ளலாம். இங்கு சாதாரணமாக வளைத்து ஒட்டியுள்ளேன்.

பூவின் இதழ்கள் செய்ய மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ஸ்ட்ரிப்புகளை ஒன்றன் மேல் ஒன்றை வைத்து ஒரு முனையை மட்டும் ஓட்டவும்.

இப்பொழுது ஆரஞ்ச் நிற ஸ்ட்ரிப்பை க்வில்லிங் கோம்பில் கடைசி 2 கம்பிகளைச் சுற்றி இருக்குமாறு வைத்து படத்தில் உள்ளது போல் ஒட்டவும். 2 ஸ்ட்ரிப்புகளையும் கோம்பின் அடிவழியாக எடுத்து கொண்டுவரவும். இதில் மஞ்சள் ஸ்ட்ரிப்பை மட்டும் படத்தில் காட்டியவாறு 3 மற்றும் 4 வது கம்பிகளின் இடையேயுள்ள இடைவெளியின் வழியாக அடிபக்கமாக விட்டு மேலே இழுக்கவும்.

ஆரஞ்சு நிற ஸ்ட்ரிப்பை 4 மற்றும் 5 வது கம்பியின் இடையேயுள்ள இடைவெளியின் வழியாக அடிபக்கமாக விட்டு மேலே இழுக்கவும். இதேபோல் ஸ்ட்ரிப்களை 5 முறை அடிப்பக்கத்திலிருந்து மேல் பக்கமாக இழுக்கவும். ஒவ்வொரு சுற்றிற்கும் ஒரு கம்பி இடைவெளி விட்டு ஸ்ட்ரிப்புகளை அடி வழியாக விட்டு மேலே இழுக்கவும்.

கடைசியில் ஸ்ட்ரிப் முடியும் இடத்தில் இரண்டையும் ஒன்றாக ஓட்டிவிடவும்.

இதேபோல் தேவையான எண்ணிக்கையில் இதழ்கள் செய்து கொள்ளவும்.

மஞ்சள், ஆரஞ்சு நிற ஸ்ட்ரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து ஒட்டி க்வில்லிங் டூல் கொண்டு வட்டமாக சுற்றி ஓட்டவும். அதை சுற்றி இதழ்களை வைத்து பூ வடிவில் ஒட்டவும்.

க்ளு காய்ந்ததும் இந்த பூவை செய்து வைத்துள்ள கொடிகள் மேல் வைத்து ஒட்டிவிடவும்.

இதேபோல் செய்த வெவ்வேறு டிசைன்கள் இவை. க்வில்டு வால் ஆர்ட் தயார். க்வில்லிங் கோம்ப் இல்லையென்றால் சீப்பு (ஹேர் கோம்ப்) வைத்தும் செய்யலாம்.

Leave a Reply