சரும பராமரிப்பு

எல்லா வித சருமத்திற்கான பொருத்தமான டிப்ஸ்-உபயோகிச்சு பாருங்க

உங்கள் சருமம் வறண்டோ, எண்ணெயாகவோ அல்லது சென்ஸிடிவாகவோ எதுவாக இருந்தாலும் தினமும் பராமரித்து வந்தால், இளமையான சருமத்தோடு நீங்கள் வலம் வரலாம்.

அதோடு, அந்தந்த பருவகாலத்திற்கு ஏற்றபடி உங்கள் சருமத்தை பராமரிக்க, மிகக் குறைந்த நேரத்தை செலவழித்தால் போது. பின் நீங்கள் சருமப்பிரச்சனைகளை சந்திக்கவே தேவையில்லை.

அப்படியே ஏற்பட்டாலும் கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளை உபயோகித்துப் பாருங்கள். மென்மையான பளிச் என்ற சருமம் உங்கள் வசமே.

அழுக்குகளை நீக்கும் கிளென்சர், சருமத்தை மெருகேற்றும் டோனர், ஈரப்பதத்தை அளிக்கும் மாய்ஸ்ரைஸர் இந்த மூன்றும் உங்கள் சருமத்தை பாதுகாக்க மிக முக்கியம்.

இதை நீங்கள் கடைகளில் வாங்குவது அநாவசியமானது. வீட்டில் எப்படி இவற்றை உபயோகிக்கலாம் எனப் பார்க்கலாம்.

கிளென்சர் : தினமும் காலையில் ரோஸ்வாட்டரைக் கொண்டு முகத்தில் உபயோகப்படுத்தினால், மிக பாதுகாப்பாக உங்கள் சருமத்தில் தங்கியிருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றலாம். ஒரு பஞ்சினால், ரோஸ்வாட்டரை நனைத்து முகம் முழுவதும் தேயுங்கள். பஞ்சிலேயே அழுக்குங்கள் வந்துவிடும். உடனடியாக கழுவுங்கள் . காய விட வேண்டாம்.

டோனர் : துளசி சாறு மிகச் சிறந்த போஷாக்கினை உங்கள் சருமத்திற்கு தரும். ரோஸ் வாட்டரை உபயோகித்தபின் துளசி சாறினை முகத்தில் தேயுங்கள். சருமம் இளமையாக இருக்கும்.

மாய்ஸ்ரைஸர் : வெங்காயச் சாறு, முல்தானி மட்டி, மற்றும் தேன் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவ வேண்டும். இது நாள் முழுவதும் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

மாய்ஸ்ரைசர் க்ரீம் அல்லது லோஷன் போட்டுச் சென்றால் சருமத்தில் தூசி எளிதில் படியும். இது அப்படியில்லை. உள்ளிருந்து ஈரப்பதத்தை தருவதால் சருமத்திற்கு நலம் தரும்.

ஸ்கரப் : சில துளி எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் மற்றும் கடல் உப்பு ஆகிய மூன்றையும் கலந்து, முகத்தில் தேய்க்கவும். காய்ந்தபின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளிச்சென்று இருக்கும். இறந்த செல்கள் அகன்று, முகம் இளமையாக இருக்கும்.

கருமை அகல : கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் போடுங்கள். காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். சூரியக் கதிர்களால் படிந்த கருமை நீங்கி, முகம் நிறம் பெறும்.

மிருதுவான சருமம் பெற : வெள்ளரியை விதையுடன் அரைத்து, பால் கலந்து முகத்தில் பேக்காக போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். பிறகு பாருங்கள் உங்கள் முகத்தை. நாள் முழுவதும் மென்மையாக ஃப்ரஷாக இருப்பீர்கள்.

முகம் பிரகாசமாய் ஜொலிக்க : தக்காளி உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கத்தை போக்கிவிடும். தக்காளியின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் ஒரு நாள் புளித்த தயிரை கலந்து முகத்தில் தடவுங்கள்.

10 நிமிடங்கள் ஆனதும் குளிர்ந்த் அனீரில் கழுவுங்கள். முகம் புதுப் பொலிவுடன் மிளிரும். முகப்பருக்கள் உங்களை நெருங்காது.

வறண்ட சருமத்திற்கு : பூசணிக்காய், வெள்ளரிக்காய், முழாம் பழம், தர்பூசணி ஆகியவ்ற்றைன் சதைப் பகுதியை எடுத்து நன்றக கலந்து முகத்தில் போடவும். காய்ந்ததும் கழுவுங்கள். சருமத்தில் வறட்சி போய், மிருதுவாய் பளபளக்கும்.

மேலே கூறிய அனைத்து குறிப்புகளும் உங்கள் சருமத்தை எப்போதும் சுத்தமாகவும், மிருதுவாகவும், இளமையகவும் வைத்திருக்கும். சருமத்தை பராமரிக்க இயற்கையானதையே நாடினால் சருமத்தை வெகு காலம் இளமையாக வைத்திருக்கலாம்.

6 13 1465799577

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button